தன்வந்திரி பீடத்தில்ஏகாதசி ஹோமமும் நெல்லிப்பொடி திருமஞ்சனமும்நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
ஆசிகளுடன் இன்று 28.06.2019 வெள்ளிக்கிழமை
ஏகாதசியை முன்னிட்டு காலை 10.00 மணி
முதல் 12.00 மணி வரை நீரிழிவு நோய், கண் நோய்கள், இதய நோய்கள், போன்ற
சகல விதமான நோயகளும் நீங்கி ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம் பெற்று மகிழ்சியான வாழ்வு கிடைக்க மூலவர் ஸ்ரீ தன்வந்திரி
பெருமாளுக்கு ஏகாதசி ஹோமத்துடன் சிறப்பு நெல்லிப்பொடி திருமஞ்சனம் நடைபெற்றது.
ஏகாதசியில்
பெருமாளை வழிபட்டால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது.
ஏகாதசி திதியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நடைபெற்ற ஏகாதசி ஹோமத்திலும், நெல்லிப்பொடி திருமஞ்சனத்திலும் பகையை வெல்லவும், புத்திரபாக்யம் கிடைக்கவும், வம்சாவளி பெருகவும், ஒளிமயமான வாழ்க்கை
அமையவும், இல்லறம் இனிக்கவும், மன உளைச்சல் அகலவும், வாழ்க்கையில் ஏற்படும்
விரக்தி நம்மை விட்டு நீங்கவும், பிரம்மஹஸ்தி
தோஷம் நீங்கவும், கடல் கடந்து சென்று வெற்றி பெறவும், வெளிநாட்டில்
உள்ள சொந்தங்கள் சிறப்படையவும், கணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு
சென்று வாழ்க்கையை ஆரம்பிக்கவும், விருப்பத்தை பூர்த்தி செய்யும் மேன்மை உண்டாகவும்,
திருமண யோகம் உண்டாகவும், "பாபமோசனிகா""
எனப்படும் பாபத்தை போக்கவும், நல்ல பேற்றினை ஏற்படுத்தவும், துரோகிகள் விலகவும், உடல் சோர்வு நீங்கவும், பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தவும்,
ரத்த சோகை அகலவும், வளர்ச்சிக்காக காணும் கனவுகள் (சிந்தனைகள்) வெற்றிபெறவும், உடல் ஆரோக்கியம் பெறவும், சௌபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கவும், வாழ்க்கையில்
அனைத்து வெற்றியும் கிடைக்கவும், முன்னோர்களின்
ஆசியை பெறவும், கனவிலும்
நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையவும், குழந்தைகள்
கல்வியில் சிறக்கவும், விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ - மாணவிகளாக திகழவும், மன பயம் அகலவும், மரண பயம் அகலவும், கொடிய துன்பம்
விலகவும், நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில்
தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கவும், ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்கவும், குடும்பத்துடன் ஆனந்தமாக வாழவும், வறுமை ஒழியவும், நோய் அகலவும், பசிப்பினி
நீங்கவும், நிம்மதி நிலைக்கவும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கவும், மங்கள வாழ்வு மலரவும், பூலோக சொர்க்க
வாழ்வு கிடைக்கவும், நிலையான
செல்வம் நிரந்தரமாக நம்வீட்டில் இருந்து வரவும், போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்பட கூட்டு பிராத்தனை நடைபெற்றது.
மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசி
வழங்கி இறை பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தனவந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment