தன்வந்திரி
பீடத்தில்குருதி
பூஜையுடன்சத்ரு
ஜெய விஜய ஹோமங்கள்.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
ஆசிகளுடன் உலக நலன் கருதியும், மழை வேண்டியும், இயற்கை வளத்திற்காகவும் வருகிற 01.07.2019
திங்கள்கிழமை
காலை 10.00 மணி
முதல் மாலை 4.00
மணி
வரை குருதி பூஜையுடன் சத்ரு ஜெய விஜய ஹோமம், சத்ரு சம்ஹார
ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவர் யாகம், நடைபெறுகிறது.
ஜெய, விஜய, சத்ரு ஹோமத்தின்
சிறப்பும் பலன்களும் :
மிகப்பழமையான சனாதன
தர்மம் எனும் இந்து மதத்தை தோற்றுவித்த ரிஷிகளும், முனிவர்களும் அந்த மதத்தில் பின்பற்றபடும்
எதையும் அறிவியல் பூர்வமாக செய்தனர். அதில் ஒன்று தான் மந்திர ஜபமும், பூஜைகளும்,
யாகங்களும் ஆகும். அந்த செயலுக்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்பது திண்ணம்.
எந்த ஒரு செயலிலும்
நன்மை என்று ஒரு இருந்தால், அதன் எதிர்ப்பதமாக தீமை என்று கட்டாயம் இருந்தே தீரும். மனிதர்களிலும்
ஒருவருக்கு தீங்கு விளைவிப்பவர்களை சத்ருக்கள் அல்லது எதிரிகள் என்று
அழைக்கின்றனர். இந்த எதிரிகள் மனிதர்கள் ரூபத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனின்
மனதிற்குள்ளாக தீய எண்ணங்கள் என்னும் வடிவில் இருந்து அவனை நல்வழியில் செல்ல
விடாமல் தடுக்கும் எதிரியாகவும் இருக்கிறது. இப்படி அனைத்து விதமான எதிரிகளை அறவே
ஒழித்து வெற்றி தரும் யாகம் தான் ஜெய ஹோமம் ஆகும்.
இந்த யாகத்தில்
கலந்துகொண்டு பிரார்த்தனை செய்பவர்களுக்கு நிச்சயமாக நல்ல பலன் தரும் சக்தி
வாய்ந்த சத்ரு ஜெய யாகமாகும் இது. இந்த யாகத்தின் மூலம் ஒருவருக்கு ஏற்படும்
எத்தகைய நேரடி மற்றும் மறைமுக எதிரிகளையும் வெற்றி கொள்ள முடியும். அவருக்கு
எதிரான சதிச் செயல்கள் எடுபடாமல் போகும். மேலும் நமது மனதிற்குள் எழும் பேராசை, அதிக கோபம், தேவையற்ற தோஷங்களும்,
நமக்குள் இருக்கும் எதிரிகளையும் இந்த ஹோமத்தின் மூலம் நீங்கி, நமக்கு நன்மைகளை
உண்டாக்கும்.
விஜய
லக்ஷ்மி ஹோமம்:
எடுக்கும்
முயற்சிகளில் விஜயத்தை தருபவள் ஸ்ரீ விஜய லக்ஷ்மி. ஸ்ரீ விஜய
லக்ஷ்மி ஹோமத்தில் பங்கேற்ப்பதின் மூலம் வறுமை நீங்கும் செல்வம் பெருகும்.
வாழ்க்கைத் தரம் உயரும். உங்கள் அழகு, செல்வம் கூடும்.
உங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும், நல்ல சிந்தனைகளைப்
பெறலாம், இலக்குகளில் வெற்றி பெறலாம், பொருளாதார
மேன்மை அடையலாம், வாழ்வில் நல்ல வசதிகளைப் பெறலாம், மனம், உடல் மற்றும் ஆன்மாவை தூய்மை படுத்தி
மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்.
சத்ரு
சம்ஹார ஹோமம்:
சத்ரு சம்ஹார
ஹோமம் என்பது, நாம் பக்தியுடன் போற்றும் முருகப் பெருமான்
என்னும் சுப்பிரமணியர் குறித்து செய்யப்படும் ஹோம வழிபாடு ஆகும்.
இந்த ஹோமத்தில்
பங்கேற்பதின் மூலம், ஸ்ரீ முருகப்பெருமானின்
அருளை பெற்று தெய்வ சாபங்கள், நவகிரக்க
தோஷங்கள், பித்ரு சாபங்கள் நீங்கவும், கர்ம வினைகளைத் தீரவும் வழி பிறக்கும்.
கண் திருஷ்டி, பயம், மன சோர்வு, நோய்கள், கடன் தொல்லைகள்
போன்றவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்ப
உறவுகள் மேம்படும்.
சொர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம் :
பைரவர் என்றால்
பயத்தை நீக்குபவர், சனி பகவானுக்கு
குரு பைரவர். ஆகவே இவரை வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும். இந்த ஹோமத்தில் பங்கேற்று பைரவரை
வழிபட்டால் தொழிலில் லாபம், பதவி உயர்வு
மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றம், குழந்தைச் செல்வம் கிடைக்கும், கடன்
தொல்லைகள் தீரும், யம பயம் அகலும், வாழ்க்கையில் தரித்திரம் அண்டாமல் செல்வச்
செழிப்பு உண்டாகும், சகல ஐஸ்வர்யங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்,
ஏவல், பில்லி மற்றும் சூனியம் விலகி மன நிம்மதி கிடைக்கும்.
குருதி
பூஜை :
எதிரிகள் தொல்லை அகலவும், முயற்ச்சிகளில் வெற்றி பெறவும், யமபயம் அகலவும், ரத்த சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகவும், ஒளிமறை நோய்கள் விடுபடவும், சகல ஐஸ்வர்யங்களும் பெற்று நல்வாழ்வு கிடைக்கவும் கிரக தோஷங்கள்
நீங்கவும், செல்வ சேர்க்கை உண்டாகவும், வழக்குகளில்
சாதகமான தீர்ப்புகள் கிடைக்கவும், விபத்துகள், அகால மரணம் போன்ற துர்வினைகள் நீங்கவும், கொடிய நோய்கள் அகலவும்,
துஷ்ட சக்திகள் மற்றும் செய்வினை பாதிப்புகள் ஒழியவும் குருதி பூஜை நடைபெறுகிறது.
மேலும் இவ்வைபவங்களில் விசேஷ மூலிகைகள், பட்டு வஸ்திரங்கள், சிகப்பு நிற வஸ்திரங்கள், ஏராளமான சௌபாக்ய பொருட்கள், நவ ரத்தினங்கள், சிகப்பு நிற புஷ்பங்கள், விசேஷ புஷ்பங்கள், சிகப்பு நிற பழங்கள், விசேஷ பழங்கள், நெய், விசேஷ சமித்துக்கள், மஞ்சள், சிகப்பு நிற குங்குமம், பால், விசேஷ நிவேதனங்கள் போன்ற பல்வேறு விசேஷ பொருட்கள் சேர்க்கப்பட உள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்குபெற்று இறையருளுடன் குருவருள் பெற்று மகிழ்சியுடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த் தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்,
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment