தன்வந்திரி பீடத்தில்லக்ஷ்மி வராஹர் ஹோமம்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி வருகிற 30.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் ஹோமமும், பீடதில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி வராஹருக்கு சிறப்பு திருமஞ்சனமும், ஆராதனைகளும் நடைபெற உள்ளது.
இரணியாக்ஷனிடம்
இருந்து பூமாதேவியை காக்க பெறுமாள் எடுத்த அவதாரமே வராஹர் அவதாரம் ஆகும். பூமாதேவியைக்
காப்பதற்கும், உலகில் தீயவை அழிப்பதற்கும் நாராயணன் நான்முகனின்
நாசியில் இருந்து வெண்பன்றி வடிவாக அவதரித்தார். தேவாதிதேவர்களின் விண்ணப்பத்தை ஏற்று, பூமாதேவியின்
வேண்டுதலுக்காகத் திருவுளம்கொண்டு அரக்கனான இரண்யாட்சனை வதம்செய்து, வராஹமூர்த்தி பூமியில் நிலைகொண்டார்.
ஸ்ரீ லக்ஷ்மி வராஹ பெருமாளை வேன்டி நடைபெறும் இப்பூஜைகளிலும் ஹோமத்திலும் பங்கேற்பதின் மூலம் ராகு தோஷங்கள் நீங்கும், பூமி
சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நல்ல பலன்களை அடைவர், சனிதசை, சனி தோஷ சங்கடங்களிலிருந்து விடுபட்டு சுகம் காணலாம்,
திருமணத்தடைகள் நீங்கும், பயம், வியாதி, துர்பிஷங்கள் தொலைந்து, அறிவும் செல்வமும் உண்டாகும்,
வாழ்வில் என்றும் சுகம் காணலாம், காரியங்களில் வெற்றி கிடைக்கும், சத்ரு உபாதைகள்
அகலும் போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது.
மேலும் இவ்வைபவங்களில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று ஸ்ரீ லக்ஷ்மி வராஹரை வழிபட்டு இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்,
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment