தன்வந்திரி
பீடத்தில்கந்தர்வ ராஜ
ஹோமம், சுயம்வர கலாபார்வதி யாகம்,
சந்தான கோபால
யாகம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக
மக்களின் நலன் கருதி இன்று 17.06.2019 திங்கள்கிழமை
பௌர்ணமியை முன்னிட்டு ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகம் மற்றும்
தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால ஹோமம் ஆகிய மூன்று ஹோமங்கள் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு ஜாதக
ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக
உள்ள தோஷங்களும், நவக்கிரக
தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும், சகல தோஷங்களும்
நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற்றது.
திருமணத்தடைகள் உள்ள பெண்கள்
திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சுயம்வரகலா பார்வதி யாகம்
நடைபெற்றது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள்
நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடத்தபட்டது.
குழந்தை பாக்யம் இல்லாத
தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சங்கல்பம் செய்து
சந்தான கோபால யாகம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஹோமங்களில் பங்கேற்ற
நபர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருள் பிரசாதமும் ஆசீர்வாதமும் வழங்கி
சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment