வாலாஜா தன்வந்திரி பீடத்தில்குருபூஜை, சண்டியாகம், குருதி பூஜை, பகவதி சேவையுடன் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதியும், மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும் குரு மஹான்களின் ஆசிர்வாதங்கள் பெற்று வாழ்வில் நலம் பெறவும், குலம் தழைக்கவும், குரு சாபங்கள், முன்னோர்கள் சாபங்கள்
அகலவும், பித்ரு தோஷம் நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும், ஞானம் பெறவும் 20.06.2019 வியாழக்கிழமை மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை குருபூஜை நடைபெற்றது குருபூஜை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நேற்று 21.06.2019 வெள்ளிக்கிழமை காலை கோபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லக்ஷ்மி
ஹோமம், சுதர்சன ஹோமம், மிருத்யஞ்சய ஹோமத்துடன் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி சன்னிதியில் சமுதாய பொருளாதார நிலை
உயரவும், அனைத்து முயற்சிகளில் வெற்றி அடையவும், வாழ்க்கைத்
தரத்தை மேம்படுத்தவும், பில்லி, சூன்னியம், செய்வினை தோஷங்கள் அகலவும், மரண பயம்
போக்கவும், நம்மை சூழ்ந்திருக்கும் தீமைகளைக் விலகி நம்பிக்கையை உருவாக்கி, உங்கள்
திறமைகளை மேம்படுத்தி, அமைதியையும், செழிப்பையும் கிடைக்கவும், தீய வினைகளை அகற்றி, எதிர்மறை சக்திகள் விலகி, துன்பங்கள் நீங்கி, அன்னை துர்கா தேவியின் அருளைப் பெற்று ஆனந்தம், ஆரோக்யம், ஐஸ்வர்யம்
பெற்று நல்வாழ்வு வாழ ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி சன்னிதியில் சண்டி ஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து காலபைரவருக்கு குருதி பூஜையும், ஸ்ரீ மஹிஷாசுர
மர்த்தினிக்கு பகவதி சேவா பூஜையும் நடைபெற்றது.
மேற்கண்ட பூஜைகளில் சென்னை போரூர் ரமணா எண்டெர்பிரைசஸ் திரு. குணசேகரன் அவர்கள் குடும்பத்தினர், கோபுர தரிசனம் இதழ் ஆசிரியர் திரு. R.S.மணி அவர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசி வழங்கி அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment