தன்வந்திரி பீடத்தில்சண்டியாகம்
(குருபூஜை, பகவதி சேவா, குருதி பூஜை நடைபெறுகிறது)
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதியும், மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும் வருகிற 20.06.2019 வியாழக்கிழமை
மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை
குருபூஜையும், 21.06.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி சன்னிதியில் சண்டி யாகமும், மாலை 5.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை பகவதி சேவா பூஜையுடன் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கும், ஸ்ரீ
கால பைரவருக்கும் குருதி பூஜையும் நடைபெறுகிறது.
அன்றாட யாகங்கள் நடைபெற்று யக்ஞபூமியாக திகழும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக மக்கள்
நலனுக்காகவும், லோக க்ஷேமத்திற்காகவும் சென்ற 14.06.2019 வெள்ளிக்கிழமை ஸ்ரீ பாதாள
சொர்ண சனீஸ்வரர், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரர், ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் ஆலயங்களின் மஹா
கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கீழ்கண்ட ஹோம, பூஜை வைபவங்கள் நடைபெற
உள்ளது.
குருபூஜை:
குரு மஹான்களின் ஆசிர்வாதங்கள் பெற்று வாழ்வில் நலம் பெறவும், குலம்
தழைக்கவும், குரு சாபங்கள், முன்னோர்கள் சாபங்கள் அகலவும், பித்ரு
தோஷம் நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும், ஞானம் பெறவும் குருபூஜை நடைபெறுகிறது.
சண்டி ஹோமம் :
சமுதாய, பொருளாதார நிலை உயரவும், அனைத்து
முயற்சிகளில் வெற்றி அடையவும், வாழ்க்கைத்
தரத்தை மேம்படுத்தவும், பில்லி, சூன்னியம், செய்வினை தோஷங்கள் அகலவும், மரண பயம்
போக்கவும், நம்மை சூழ்ந்திருக்கும் தீமைகளைக் விலகி நம்பிக்கையை உருவாக்கி, உங்கள்
திறமைகளை மேம்படுத்தி, அமைதியையும், செழிப்பையும் கிடைக்கவும், தீய வினைகளை அகற்றி, எதிர்மறை சக்திகள் விலகி, துன்பங்கள் நீங்கி, அன்னை துர்கா தேவியின் அருளைப் பெற்று ஆனந்தம், ஆரோக்யம், ஐஸ்வர்யம்
பெற்று நல்வாழ்வு வாழ ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி சன்னிதியில் சண்டி ஹோமம் நடைபெறுகிறது.
பகவதி சேவா பூஜை :
வாழ்வில்
செழுமை, தூய்மை, கருவுறுதல்
மற்றும் நிறைவு வேண்டி ராஜராஜேஸ்வரி தேவியை குறித்து செய்யப்படும் பூஜையே பகவதி
சேவா பூஜை. நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறைகள் எல்லாம் அகலவும், கிரகங்களின் தோஷங்களை போக்கவும், அதன் மூலம்
வாழ்வில் அமைதி மற்றும் நல்லிணக்கம் பெறுவதற்கும் இந்த பூஜை செய்யப்படுகின்றது.
நமது விருப்பங்கள் நிறைவேறவும், துயரங்கள்
நீங்கவும், இந்த பூஜை மேற்கொள்ளப்படுகின்றது. இந்த பூஜையில் முக்கியமாக மாலை
வேளையில் பார்வதி, துர்கை அல்லது
காளி வழிபாடு நடைபெறுகின்றது. இந்தப் பூஜை செய்வதன் மூலம் தேவியின் கிருபையால்
நமக்கு நீண்ட ஆயுள், நல்ல
ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சி கிட்டுகின்றது.
குருதி பூஜை :
எதிரிகள் தொல்லை அகலவும், முயற்ச்சிகளில் வெற்றி பெறவும், யமபயம் அகலவும், ரத்த சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகவும்,
ஒளிமறை நோய்கள் விடுபடவும், சகல ஐஸ்வர்யங்களும் பெற்று நல்வாழ்வு கிடைக்கவும் கிரக தோஷங்கள்
நீங்கவும், செல்வ சேர்க்கை உண்டாகவும், வழக்குகளில்
சாதகமான தீர்ப்புகள் கிடைக்கவும், விபத்துகள், அகால மரணம் போன்ற துர்வினைகள் நீங்கவும், கொடிய நோய்கள் அகலவும்,
துஷ்ட சக்திகள் மற்றும் செய்வினை பாதிப்புகள் ஒழியவும் ஸ்ரீ காலபைரவருக்கும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கும் குருதி பூஜையும் நடைபெறுகிறது.
மேலும் இவ்வைபவங்களில் விசேஷ மூலிகைகள், பட்டு வஸ்திரங்கள்,
சிகப்பு நிற வஸ்திரங்கள், ஏராளமான சௌபாக்ய பொருட்கள், நவ ரத்தினங்கள், சிகப்பு நிற
புஷ்பங்கள், விசேஷ புஷ்பங்கள், சிகப்பு நிற பழங்கள், விசேஷ பழங்கள், நெய், விசேஷ சமித்துக்கள்,
மஞ்சள், சிகப்பு நிற குங்குமம், பால், விசேஷ நிவேதனங்கள் போன்ற பல்வேறு விசேஷ பொருட்கள்
சேர்க்கப்பட உள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்குபெற்று இறையருளுடன் குருவருள் பெற்று மகிழ்சியுடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த் தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்,
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment