தன்வந்திரி பீடத்தில் நாளைகுருவார சங்கடஹர சதுர்த்தி ஹோமம்பெருவிழாவாக நடைபெறுகிறது.
ஹோமத்தின் பலன்
:
இந்த ஹோமத்தில்
பங்கேற்பதின் மூலம் சங்கடங்கள் நீங்கும், கவலைகள் தீரும், நன்மைகள் சேரும்,
திருமணம், குழந்தை பாக்யம், தொழில் அபிவிருத்தி ஏற்படும், தடைகள் நீங்கி சகல
கார்யங்களிலும் வெற்றி பெறலாம், குருவருள் கிடைக்கும், ஞானம் பிறக்கும் போன்ற
பல்வேறு நன்மைகள் பெறலாம்.
நாளை 20.6.2019 வியாழக்கிழமை விகாரி வருஷம் ஆனி மாதம் 5 ஆம் தேதி மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை
வியாழக்கிழமை வரும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சங்கட ஹர நிவாரண ஹோமம், விஷேச அபிஷேகம், மலர் அலங்காரம், சஹஸ்ரநாம
அர்ச்சனை, மஹா தீபாராதனை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ விநாயக
தன்வந்திரிக்கு நடைபெற உள்ளது.
இந்த ஹோமத்தில்
நவசமித்து, கரும்பு, மோதகம், அருகம்புல், நெய், வலம்புரி, இடம்புரி,
வெண்கடுகு, மாசிக்காய், தான்றிக்காய், மகிழம்பூ, முந்திரி, திராட்சை, பாதாம்பருப்பு,
பேரிச்சம் பழம், கர்ஜூரக்காய், அச்சுவெல்லம், நெல்பொறி, அவல், உடைச்சகடலை, கொப்பரை,
தேங்காய், தேன், ஜாபத்திரி, லவங்கம், ஏலக்காய், ரோஜா மொக்கு, கடல்பாசி, கடல் நூரை,
வால்மிளகு, திப்பிலி, சுக்கு, புஜபத்திரி, நவதானியம், வெட்டிவேர், கிச்சிலி கிழங்கு,
வசம்பூ, நன்னாரி, ருத்திரஜடை, மட்டிப்பால், தசாங்கம், ஜவ்வாது, புணுகு, கஸ்தூரிமஞ்சள்,
கோரைக்கிழஙுகு, பூந்திகொட்டை, சீந்தல்கொடி, சித்தரத்தை, மூங்கில் அரிசி, பரங்கி, சக்கை,
வெண்மிளகு, வால்மிளகு, நாயுருவி, தேவதாரிப்பட்டை, கருங்காலி போன்ற பல்வேறு
திரவியங்கள் சேர்க்கப்பட உள்ளன.
மேலும் மஞ்சள் வாழை, பச்சை வாழை, கற்பூர
வாழை, செவ்வாழை, நாவல்பழம், விளாம்பழம், மாம்பழம், மாதுளை, ஆரஞ்சு, சாத்துகொடி, திராட்சை,
ஆப்பிள், கொய்யா, அன்னாசி, கரும்பு, எலுமிச்சை, இளநீர் போன்ற பல்வேறு பழங்களும்,
பொருட்களும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்யப்பட உள்ளது. விருப்பமும் ஆர்வமும்
உள்ளவர்கள் தங்களால் இயன்ற அளவு உபயம் செய்து காரியசித்தி கணபதியின் பேரருளை
பெற்றுய்ய வேண்டுகிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்,
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment