தங்க சனீஸ்வரர் – ஜெய மங்கள சனீஸ்வரர் – ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுபேட்டை, ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 14.06.2019 வெள்ளிக்கிழமை பாதாள சொர்ண
சனீஸ்வரருக்கும், ஜெய மங்கள சனீஸ்வரருக்கும், லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வேண்டும் வரங்கள்
தரும் லக்ஷ்மி வராஹருக்கும் மங்கள வேத பாராயணத்துடன் வாத்யங்கள் முழங்க மஹா
கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் முன்னிலையில் 10 க்கும்
மேற்பட்ட சைவ வைணவ ஆச்சார்யர்கள் பங்கேற்று காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை நான்காம் கால அவப்ருத யாக பூஜையுடன் கோ பூஜை, விஸ்வரூப
தர்சனம், தம்பதி சங்கல்பம், மூலிகை திவ்யாஹுதி, சனீஸ்வர சாந்தி ஹோமம், பூர்ணாஹுதி,
மஹா தீபாராதனை, யாத்திரா தானம், கடம் புறப்படுதல், லக்ஷ்மி வராஹர் கோபுர
சம்ப்ரோக்ஷண மஹா கும்பாபிஷேகம், ஜெய மங்கள சனீஸ்வரர் கோபுர மஹா கும்பாபிஷேகம்,
சொர்ண சனீஸ்வரர் கோபுர மஹா கும்பாபிஷேகம், ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் மூலவர் சம்ப்ரோக்ஷண
கும்பாபிஷேகம், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரர் – ஸ்ரீ சொர்ண சனீஸ்வரர் மஹா
கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஸ்ரீபுரம் சிருஷ்டித்த ஸ்ரீ சக்தி அம்மா அவர்கள் பங்கேற்று சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதனை தொடர்ந்து ஸ்ரீமதி. ஜலஜா கோபாலகிருஷ்ணன் குழுவினரின் தொடர் பக்தி பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இவ்வைபவங்களில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. S.A.ராமன் I.A.S., சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி RMT.டீக்காராமன், தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி DR. P.ஜோதிமணி, சென்னை போரூர் ரமணா இண்டஸ்ட்ரீஸ் திரு. குணசேகரன், வேலூர் துர்காபவன் ஹோட்டல் திரு. உதயசங்கர். திரு. ஆதித்ய குருஜி, பெங்களூர் திரு சங்கமேஸ்வரன் குடும்பத்தினர்கள், பெங்களூர் திரு. ஸ்ரீனிவாசமூர்த்தி குடும்பத்தினர்கள், திரு. சச்சின் குமார் குடும்பத்தினர்கள், திரு. புலியூர் பாலு, சென்னை டாக்டர். ரங்கராஜன் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்கள். மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகள் வழங்கி
சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment