தன்வந்திரி பீடத்தில்ஷஷ்டி – சத்ரு சம்ஹார ஹோமம்.
வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
ஆசிகளுடன் வருகிற 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை
ஷஷ்டி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சத்ரு தோஷங்கள் அகல சத்ரு சம்ஹார ஹோமத்துடன் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு
சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
ஷஷ்டியின்
சிறப்பு :
விரதங்களுள்
கலியுக வரதனும் கண்கண்ட தெய்வமுமான கந்தனுக்குரிய சிறந்த விரத நாட்கள் மூன்றாகும்.அவை
முறையே சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி
விரதம் ஆகியவையாகும். இவற்றுள் மிகச் சிறந்த விரதம் சஷ்டி விரதமேயாகும்.
சத்ரு சம்ஹார ஹோமம் :
ஸ்ரீ முருக
வழிபாடு தொன்றுதொட்டு இருந்து வருகின்றது. ஸ்ரீ முருகருக்குரிய ஹோமங்களில் சத்ரு சம்ஹார ஹோமம் கைமேல் பலன் தரக்கூடியது. இந்த ஹோமத்தின் மூலம்
தீயவற்றிலிருந்தும், எதிரிகளின் தொல்லையிலிருந்தும், நாம் பாதுகாப்பு பெறலாம், நம் முன்னோர்கள் மற்றும்
கிரகங்களின் சாபங்களிலிருந்து நம்மை விடுவித்து தீயகர்ம வினை நீங்கி குடும்ப
வாரிசுகள், குடும்ப நல்லுறவு, கடன்களிலிருந்து
விடுதலை பெற்று நலம் பெறலாம். மேலும் எதிரிகள் தொல்லை, அரசியலில்
தொல்லை, வியாபாரத்தில் போட்டியாளர்களிடம் இருந்து ஏற்படும்
தொல்லை நீங்கும், சூனியம், திருஷ்டியால் கஷ்டப்படுகிறவர்கள்,
நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதிர்மறை
சக்திகளின் தொல்லை, கிரகங்களின் அனுகூலமற்ற நிலைப்பாடு,
போன்றவைகள் நீங்கி சந்ததி வளரவும் குடும்ப உறவுகள் மேம்படவும்
மந்தம் மற்றும் பயம் நீங்கும், தடைகளை நீக்கி உங்கள் விருப்பங்கள் நிறைவேறவும்,
எதிரிகளை அழித்து வெற்றி காணவும், ரியல்
எஸ்டேட் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவும், நீங்கள் உங்கள் லௌகீக மற்றும்
ஆன்மீக வாழ்வில் நன்மை தரும் மாற்றங்களைக் காணவும், முருகனின்
அற்புதமான சக்திகளின் மூலம் உங்கள் அதிர்ஷ்டத்தில் வியத்தகு மாற்றத்தை உணரவும் இந்த
ஹோமம் வழிவகை செய்யும்.
மேற்கண்ட
ஹோமத்தில் பலவகையான மூலிகைகள், வாசனாதி திரவியங்கள், புஷ்பங்கள் மற்றும் நெய், தேன்
சேற்க்கப்பட்டு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையுடன் மஹா பூர்ணாஹூதி நடைபெற உள்ளது.
இந்த
யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை
திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை
பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர்
வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற
பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட
அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்,
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment