தன்வந்திரி பீடத்தில்பிரதோஷ பூஜை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
ஆசிகளுடன் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று 30.06.2019 ஞாயிற்றுக்கிழமை
மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவலிங்க
ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை
சமேத ஸ்ரீ மரகதேஸ்வரருக்கும் சிறப்பு பிரதோஷ பூஜைகள் நடைபெற்றது.
மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம்
எனப்படுகிறது. இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி
இன்பம் பெறலாம், தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
ஸ்ரீ
மரகதேஸ்வரருக்கும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடைபெற்று வில்வம், அரளி, தாமரை,மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment