தன்வந்திரி பீடத்தில்தேய்பிறை அஷ்டமியில்மஹாபைரவர் யாகம் - நிகும்பிலா யாகம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று 25.06.2019 செவ்வாய்கிழமை மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை நிகும்பிலா யாகம், மஹா காலபைரவர் யாகத்துடன் நவ பைரவர் யாகம் நடைபெற்றது.
இந்த யாகங்களை
தொடர்ந்து மஹா காலபைரவருக்கும், ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவருக்கும், ஸ்ரீ ஐஸ்வர்ய
ப்ரத்யங்கிரா தேவிக்கும் நவ கலச திருமஞ்சனமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.
இந்த யாகங்களிலும், அபிஷேகம், ஆராதனைகளிலும் சித்தர்களின் அருளாசி கிடைக்கவும், இடி, மின்னல், எரிமலை, பூகம்பம், நிலநடுக்கம், புயல், கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை பேரழிவுகளில் இருந்து நம்மை பாதுகாக்கவும்,
காட்டு மிருகங்கள், விஷ ஜந்துக்களால் ஏற்படும் பயம் நீங்கவும், மாந்ரீக தோஷம், துர்தேவதைகளின்
சேஷ்டைகள் அணுகாமல் இருக்கவும், சகல நோய்களும் குணமாகவும், எண்ணிய காரியங்களில்
வெற்றி பெறவும், சகல சம்பத்தும் திருமகள் திருவருளால் கிடைக்கவும், சர்வ ஜன வசியம்
கிடைக்கவும், வியாபாரம், தொழிலில் முன்னேற்றம்
பெறவும், சத்துருக்கள்
சரணடையவும் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் வேலூர் மாவட்ட
காவல் துறை கண்காணிப்பாளர் திரு. பிரவேச் குமார் I.P.S. அவர்கள் குடும்பத்தினர் பங்கேற்று
சிறப்பித்தினர். மேலும் இவ்வைபவங்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று
பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment