Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, June 23, 2019

Shashti Sathru Samhara Homam .....


தன்வந்திரி பீடத்தில்ஷஷ்டிசத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் இன்று 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை ஷஷ்டி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சத்ரு தோஷங்கள் அகல சத்ரு சம்ஹார ஹோமத்துடன் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இந்த ஹோமத்திலுல், விசேஷ ஆராதனைகளிலும் தீயவற்றிலிருந்தும், எதிரிகளின் தொல்லையிலிருந்தும், நாம் பாதுகாப்பு பெறவும், நம் முன்னோர்கள் மற்றும் கிரகங்களின் சாபங்களிலிருந்து நம்மை விடுவித்து தீயகர்ம வினை நீங்கி குடும்ப வாரிசுகள், குடும்ப நல்லுறவு, கடன்களிலிருந்து விடுதலை பெற்று நலம் பெறவும், எதிரிகள் தொல்லை, அரசியலில் தொல்லை, வியாபாரத்தில் போட்டியாளர்களிடம் இருந்து ஏற்படும் தொல்லை நீங்கவும், சூனியம், திருஷ்டியால் கஷ்டப்படுகிறவர்கள், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதிர்மறை சக்திகளின் தொல்லை, கிரகங்களின் அனுகூலமற்ற நிலைப்பாடு, போன்றவைகள் நீங்கி சந்ததி வளரவும், குடும்ப உறவுகள் மேம்படவும், மந்தம் மற்றும் பயம் நீங்கும், தடைகளை நீக்கி உங்கள் விருப்பங்கள் நிறைவேறவும், எதிரிகளை அழித்து வெற்றி காணவும், ரியல் எஸ்டேட் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவும், நீங்கள் உங்கள் லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்வில் நன்மை தரும் மாற்றங்களைக் காணவும், முருகனின் அற்புதமான சக்திகளின் மூலம் உங்கள் அதிர்ஷ்டத்தில் வியத்தகு மாற்றத்தை உணரவும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற பக்தர்களுக்கு பிடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






No comments:

Post a Comment