ஆரோக்ய பீடத்திற்கு வந்தால்ஆரோக்யத்துடன் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.(திருமணம், குழந்தைபேற்றுடன்)
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும்
பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன்
வருகிற 16.07.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை
பௌர்ணமி யாகமும், மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஸ்ரீ
ஏகரூப ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில் கடந்த 15 வருடமாக உலக நலன் கருதியும், பக்தர்களின் தேவைகள் பூர்த்தியாகவும்,
பல்வேறு வகையான காரிய சித்தி ஹோமஙகள், சகலதேவதா ஹோமங்கள் நடைபெற்று இங்கு பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ள 77 விதமான தெய்வங்களுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும்
அமாவாசை தோறும் திருஷ்டிகள், செய்வினை தோஷங்கள்,
பாபங்கள், சாபங்கள் அகல சரப சூலின் மஹா ப்ரத்யங்கிரா காளி யாகமும், தேய்பிறை அஷ்டமி
தோறும் மஹா காலபைரவர் யாகத்துடன் சொர்ண பைரவர் யாகமும், குபேர யாகமும், பௌர்ணமி தோறும்
நக்ஷத்திர தோஷங்கள் அகலவும், சகல காரியமும் கைக்கூட பௌர்ணமி யாகமும் நடைபெறுகிறது.
மேலும் ஏகாதசி, திருவோணம் நாட்களில் சிறப்பு தன்வந்திரி ஹோமமும், தைல திருமஞ்சனமும்,
நெல்லிப்பொடி திருமஞ்சனமும் நடைபெறுகிறது. இவ்வைபவங்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று
பலன் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் மேலும் தன்வந்திரி பீடத்திற்கு பக்தர்கள் வருகை
புரிந்து யாகங்களில் பங்கேற்று பயன்பெற வருகிற பௌர்ணமி அன்று பௌர்ணமி யாகம் நடைபெற
உள்ளது.
வயது முப்பதை கடந்து
விட்டோம், வாழ்க்கையில் விரக்தி ஏற்ப்படுகிறது. இனி எனக்கு திருமணம் நடைபெறுமா?
என்ற கேள்வி எழுகிறதா... 40 வயதை தொட்டுவிட்டோம், எங்களுக்கு குழந்தை
பாக்யம் இனி கிடைக்குமா? 10 ஆண்டுகளாக ஆரோக்யத்தில் தடைகள், பல்வேறு
ஆண்டுகளாக வியாபாரத்தில் முடக்கம், தம்பதிகள் இடையை கருத்து வேற்றுமையால் பல
ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றோம். இப்படி பல ஆயிரம் பிரச்சனைகளுடன்
வாழ்ந்து வருகின்றோம். இதில் முக்கியமானது திருமணம்தான். இந்த வருடம் திருமணம்
நடக்கும், அடுத்த வருடம் திருமணம் நடக்கும் என பல வருடங்களை கடந்தும் நடைபெறவில்லை. இருந்தும் மனதை அமைதிப்படுத்தி
கொள்கிறோம். இவற்றிற்கு பரிகாரமாக பல்வேறு கோவில்களுக்கு சென்று பரிகாரமும் செய்து
வருகின்றோம். ஆனால் அதில் ஒரு சிலருக்கு மட்டுமே நன்மை கிடைக்கிறது. மேற்கண்ட
கேள்விகளுக்கு தீர்வாக இந்த கோவிலுக்கு ஒருமுறை அல்லது குறிப்பிட்ட நாளில் சென்று
வந்தால் போதும் உங்களுக்கு நிச்சயம் திருமணம், குழந்தை பேறு, ஆரோக்யத்தில்
முன்னேற்றம், தொழில் அபிவிருத்தி, நக்ஷத்திர தோஷம் நீங்குதல், போன்ற பல்வேறு சுப
நிகழ்ச்சிகளும், நன்மைகளும். இந்த வருடத்தில் நடக்கும் என்கின்றனர் வருகை புரிந்து
பலன்பெற்ற பக்தர்கள்.
ஸ்ரீ
மரகதாம்பிகை மரகதேஸ்வரர் வேண்டி நடைபெறும் சுயம்வர கலாபார்வதியாகத்திலும், ஸ்ரீ வாசவி கன்னிகா
பரமேஸ்வரியை வேண்டி நடைபெறும் கந்தர்வ ராஜ ஹோமத்திலும், ஸ்ரீ நவனீத
கிருஷ்ணரை வேண்டி நடைபெறும் சந்தான கோபால யாகத்திலும், ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டி
நடைபெறும் ஆரோக்ய ஹோமத்திலும், ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரை வேண்டி நடைபெறும் தொழில் அபிவிருத்தி
ஹோமத்திலும், அதனை தொடர்ந்து நடைபெறும் திருமஞ்சன வைபவங்களிலும் கலந்து கொள்ளும் ஆண்,
பெண், தம்பதிகள், குடும்பத்தினர்களுக்கு அனைத்துவிதமான ஆரோக்யம்,
ஐஸ்வர்யத்துடன், தொழில் அபிவிருத்தி, தம்பதிகள் ஒற்றுமை, திருமணம் கைக்கூடுதல்,
குழந்தை பாக்யம் போன்ற நற்காரியங்கள் முன்னேற்றம் ஏற்படுகிறது என்கின்றனர் பக்தர்கள்.
எப்படி செல்வது :
சென்னை – பெங்களூர்
நெடுஞ்சாலையில் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கே சோளிங்கர் -
திருப்பதி செல்லும் சாலையில் 3 கிமீ
தூரத்தில் கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்.
நடை திறப்பு :
காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இந்த ஆரோக்ய பீடத்தின் நடை
திறந்திருக்கும்.
இங்கு நடைபெறும் பூஜைகளிலும், யாகங்களிலும் பங்கேற்க விரும்பும் பக்தர்கள்
சௌபாக்ய பொருட்கள், மூலிகைகள், வெற்றிலை பாக்கு, புஷ்பங்கள், நெய், தேன், சமித்துகள்,
பழங்கள், வஸ்திரங்கள், அபிஷேக பொருட்கள், மஞ்சள், குங்குமம், அன்னதான பொருட்கள், மளிகை
சாமான்கள், அளித்து பகவத் கைங்கர்யத்தில் பங்கேற்கலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்,
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment