தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வினாயகர் தன்வந்திரி,தன்வந்திரி வினாயகர் தைலாபிஷேகம்,ராஜமாதங்கி ஹோமம், பூஜை, சிறப்பு அபிஷேகம்.
வாலாஜாபேட்டை,ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி , சியாமளா நவராத்திரி விழா தொடங்கி நடைபெறுகிறது.
சியாமளா நவராத்திரியை முன்னிட்டு இன்று 22ம்தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் வருகிற 30ம்தேதி திங்கள் கிழமை முடிய தன்வந்திரி பீடத்தில் உள்ள ராஜயோகம் தரும் ராஜமாதங்கிக்கு தினந்தோறும் ஹோமமும், சிறப்பு அபிஷேகமும், காலை , மாலை இரு வேளைகளிலும் பூஜைகளும் நடைபெறுகிறது.
சியாமளா நவராத்திரியில் முதல் நாளான இன்று ராஜமாதங்கி ஹோமமும், மஞ்சள் அபிஷேகமும் , சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
சுப காரிய தடைகள் விலக, கல்வி ஞானம் மேம்பட, கலைகளில் தேர்ச்சி, வேலை வாய்ப்பு, உயர் பதவி பெற, செயல்களில் வெற்றி , ராஜ யோகத்தினை பெற வேண்டி நடைபெறும் இந்த ஹோமங்கள் மற்றும் அபிஷேக பூஜைகளில் பக்தர்கள் பங்கு பெற்று பயன் பெறலாம் என பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று 22ம்தேதி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ வினாயகர் தன்வந்திரி, ஸ்ரீ தன்வந்திரி வினாயகருக்கு சிறப்பு ஹோம பூஜைகளுடன், தைலாபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். ஹோமம், அபிஷேகம் மற்றும் பூஜையில் பங்கேற்று ஸ்வாமி தரிசனம்செய்த பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment