வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , நாளை தை அமாவாசை முன்னிட்டு நரிக்குறவர்களுக்கு வஸ்திர தானம், அன்னதானம். 1000கிலோ மிளகாய் கொண்டு ப்ரத்யங்கிரா யாகமும் நடைபெறுகிறது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி , தினந்தோறும் பல்வேறு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நாளை ஜனவரி 21ம்தேதி சனிக்கிழமை காலை தை அமாவாசை முன்னிட்டு சகலவிதமான சாப தோஷங்கள், பித்ரு தோஷங்கள் நீங்கிட வேண்டி பல்வேறு வகையான யாகங்கள்,பூஜைகள் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நரிக்குறவர் குடும்பங்களுக்கு வஸ்திர தானம், அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் 1000 கிலோ மிளகாய் கொண்டு ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகமும் நடைபெறுகிறது. பின்னர் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.
---
No comments:
Post a Comment