தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 2 வது நாளாக ஸ்ரீலஷ்மி குபேரர் யாகம் அகத்தியர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜை
வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,
ஒரு லட்சம் காசுகள் கொண்டு ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு சிறப்பு யாகம் , பூஜை, அர்ச்சனை ஆகியவை நடைபெறுகிறது.
ஜனவரி 7ம் தேதி முதல் வருகிற 18ம்தேதி முடிய 12 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாகம், பூஜை ஆகியவை நேற்று சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.2 வது நாளாக இன்றும் ( 8ம்தேதி) சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம் நடைபெற்றது. ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகத்துடன் மஹா லிங்க அர்ச்சனையும், பூஜையும் நடைபெற்றது
ஸ்ரீ அகஸ்தியர் பிறந்த நாளாக கருதப்படும் மார்கழி மாத ஆயில்ய நட்சத்திர தினத்தை முன்னிட்டு அகஸ்தியருக்கு 2 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில் இன்று 8ம்தேதி ஸ்ரீ அகஸ்தியருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் பூஜைகள் நடைபெற்றது.
முன்னதாக இன்று 8ம்தேதி ஸ்ரீதன்வந்திரி, மஹா சுதர்சன,ஸ்ரீ மகாலஷ்மி, கந்தர்வ ராஜ ஹோமங்களும் நடைபெற்றன.
ஹோமங்கள், பூஜைகள், அபிஷேகங்கள் ஆகியவற்றில் ஏராளமான ஓம்சக்தி பக்தர்கள் கலந்து கொண்டு தெய்வங்களை தரிசனம் செய்து பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிர்வாதமும் பெற்று சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment