ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனிப்பெயர்ச்சி மஹா யாகம் பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி பங்கேற்பு
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி தினந்தோறும் யாகங்கள் நடைபெற்று வருகிறது. இது தவிர திருக்கணித மற்றும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி , குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகியவற்றின் போதும், முக்கிய நாட்கள் மற்றும் விசேஷ நாட்களின் போதும் பல்வேறு சிறப்பு மஹா யாகங்களும் நடைபெற்று தன்வந்திரி ஆரோக்ய பீடம் யக்ஞ பூமியாக திகழ்ந்து வருகிறது.
அந்த வகையில் இன்று ஜனவரி 17ம்தேதி செவ்வாய்க்கிழமை, திருக்கணிதப்படி சனி பகவான் மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் 4 இன்ச் உயரத்தில் தங்கத்தினால் ஆன சொர்ண ( தங்க ) சனீஸ்வரராக 20 அடி அகலம், 27அடி நீளத்தில், 10 அடி ஆழ பாதாளத்தில் ஸ்ரீ பாதாள சொர்ண ( தங்க) சனீஸ்வரராகவும் , ஒன்றரை அடி உயரத்தில் நீலா தேவியுடன், கையில் ஊன்று கோலுடன் ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரராகவும் தனித்தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள் புரிந்து வரும் சனீஸ்வரர்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
முன்னதாக சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் நடைபெற்றது. யாகத்தில் பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தற்போதைய சனிப்பெயர்ச்சியை ஒட்டி ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களும், சனி திசை மற்றும் சனி புக்தி நடப்பவர்களும், ஏழரை சனி, விரையசனி, ஜென்மசனி, பாதசனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி போன்ற தோஷங்கள் அகலவும், ஹோமம், பூஜைகளில் கலந்து கொண்டு, பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று, பரிகாரங்கள் செய்து கொண்டு சனீஸ்வரரை வழிபட்டு சென்றனர்.
சனிப்பெயர்ச்சி மஹா யாகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி டாலர் மற்றும் அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக உழவர் திருநாளான இன்று ஸ்வாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment