வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகங்கள் வருகிற 17ம்தேதி நடைபெறுகிறது.
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி தினந்தோறும் யாகங்கள் நடைபெற்று வருகிறது. இது தவிர சனிப்பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி ஆகியவற்றின் போதும் வெகு விமரிசையாக சனிப்பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி மஹா யாகங்களும், முக்கிய நாட்கள் மற்றும் விசேஷ நாட்களின் போதும், திருக்கணித மற்றும் வாக்கிய பஞ்சாங்கத்தின் படியும் பல்வேறு சிறப்பு யாகங்களும் நடைபெற்று தன்வந்திரி ஆரோக்ய பீடம் யக்ஞ பூமியாக திகழ்ந்து வருகிறது.
சனிப்பெயர்ச்சி
தற்போது 2023ம் வருடம் தொடங்கியுள்ளநிலையில் திருக்கணிதப்படி வருகிற ஜனவரி 17ம்தேதி அன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இந்த பெயர்ச்சியில் சனி பகவான் மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
சனிப்பெயர்ச்சியில், சனி பகவான் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி ஆகியவையாக வரும் காலங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.எனவே பக்தர்கள்
ஏழரை சனி, விரையசனி, ஜென்மசனி, பாதசனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி போன்ற தோஷங்கள் அகலவும்,சனிதிசை மற்றும் சனி புக்தி நடைபெறும் போது தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் செய்து கொள்வது அவசியம் ஆகும்.
தற்போதைய சனிப்பெயர்ச்சியை ஒட்டி ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களும், சனி திசை மற்றும் சனி புக்தி நடப்பவர்களும் பரிகாரங்கள் செய்து கொள்வது அவசியம் ஆகிறது.
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் 4 இன்ச் உயரத்தில் தங்கத்தினால் ஆன சொர்ண ( தங்க ) சனீஸ்வரராக காட்சி தருகிறார். மேலும் இந்த சொர்ண (தங்க)சனீஸ்வரர் 10 அடி ஆழ பாதாளத்தில் சன்னதி கொண்டு, ஸ்ரீ பாதாள சொர்ண ( தங்க) சனீஸ்வரராக பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்புரிந்து வருகிறார்.
இது தவிர ஒன்றரை அடி உயரத்தில் நீலா தேவியுடன், கையில் ஊன்று கோலுடன்
ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரர்க்கும் தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் பக்தர்கள் தங்களது சனி தோஷங்கள் விலகிட வேண்டி, சனீஸ்வரர் மீது தங்கள் கைகளாலேயே எண்ணெய் ஊற்றி வழிபட்டு செல்வது சிறப்பு ஆகும்.
வேறு எங்கும் இல்லாத வகையில் சிறப்புகளுடன் அமைந்துள்ள இந்த சனீஸ்வரர்களுக்கு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு வருகிற ஜனவரி 17ம்தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிமுதல்8 மணிக்குள் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும், சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெறுகிறது.
பக்தர்கள் இந்த யாகம், அபிஷேக, பூஜைகளில் பங்கேற்று சங்கல்பம் செய்து கொண்டு பயன் பெறலாம். சனிப்பெயர்ச்சி மஹா யாகத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி டாலர் மற்றும் அருட் பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் மேலும் அன்றே உழவர் திருநாள் என்பதால் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளதாக தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.
சனிப்பெயர்ச்சி மஹா யாகங்கள் மற்றும் உழவர் திருநாள் ஆகியவற்றை முன்னிட்டு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளும், பல்வேறு தானங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.
------------
No comments:
Post a Comment