வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 21 அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர் வருஷாபிஷேக விழா
வாலாஜாப்பேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, 21 அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர்
வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று கருட பகவானை தரிசனம் செய்தனர்.
உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் 21 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் , 30 டன் எடையில் மகாபலிபுரத்தில் உருவாக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வழியாக நீண்ட வாகனத்தில் கரிக்கோல பவனி வந்த விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் நுழைவு வாயில் அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கம்பீரமான காட்சியுடன், பெரிய திருவடியாக பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
இந்த 21 அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடரை சர்ப்ப தோஷங்கள், நாக தோஷங்கள், வாகன தோஷங்கள் அகலவும், ஆரோக்யத்தில் முன்னேற்றம் ஏற்படவும் மனமுருக வழிபட்டு செல்கின்றனர்.
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 21 அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர் பிரதிஷ்டை செய்யப்பட்டதின் வருஷாபிஷேக விழா இன்று 27ம்தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வருஷாபிஷேகத்தை ஒட்டி முன்னதாக கருடபகவானுக்கு பல்வேறு ஹோம திரவியங்களை கொண்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னர் பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடருக்கு சிறப்பு அபிஷேகமும் , பூஜைகளையும் நடத்தி வைத்தார்.
கருடர் வருஷாபிஷேக விழா ஹோமம் மற்றும் அபிஷேக பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கருடபகவானையும், மூலவர் தன்வந்திரி பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களையும் தரிசனம் செய்து , பிரசாதமும்,ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.
முன்னதாக ஆந்திர மாநிலத்திலிருந்து வந்திருந்த பெண் பக்தர்கள் , கருடர் வருஷாபிஷேக விழாவை ஒட்டி கருட பகவான் பாடல்கள் பாடி பஜனை நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment