தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 3 வது நாளாக ஸ்ரீலஷ்மி குபேரர் யாகம் பா.ஜ.க.தேசிய செய்தி தொடர்பாளர் பிஜாய் சோங்கர் சாஸ்திரி, ஸ்வாமி தரிசனம் வருகிற 11ம்தேதி மாங்கல்ய பூஜை நடைபெறுகிறது.
வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, ஒரு லட்சம் காசுகள் கொண்டு ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு சிறப்பு யாகம் , பூஜை, அர்ச்சனை ஆகியவை நடைபெறுகிறது.
ஜனவரி 7ம் தேதி முதல் வருகிற 18ம்தேதி முடிய 12 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாகம், 3 வது நாளாக இன்றும் (9ம்தேதி) சிறப்பு பூஜைகளுடன்
ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம் நடைபெற்றது. ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகத்துடன் மன்ய சூக்த பாசுபத ருத்ர ஹோமமும், பூஜையும் நடைபெற்றது . மேலும் இன்று 9ம்தேதி ஸ்ரீதன்வந்திரி, மஹா சுதர்சன,ஸ்ரீ மகாலஷ்மி ஹோமங்களும் நடைபெற்றன.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், இந்திய அரசின் தேசிய எஸ்.சி.,எஸ்.டி.ஆணையத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர். பிஜாய் சோங்கர் சாஸ்திரி ,இன்று 9ம்தேதி தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வருகை தந்தார். அவருக்கு தன்வந்திரி பீடம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் ஸ்ரீ லஷ்மி குபேர யாகத்தில் கலந்து கொண்டு தன்வந்திரி பெருமாளை தரிசனம் செய்து, பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றார்.
கூடாரவல்லி திருப்பாவையில் ‘ கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா ’ என்ற 27வது பாசுரத்தை ஆண்டாள் நாச்சியார் பாடிய நாள் கூடாரவல்லி எனப்படுகிறது. ஆண்டாள், பெருமாளை கணவராக பெற்ற நாள் இந்த கூடாரவல்லி என்பதால் வருகிற மார்கழி 27ம்தேதியான ஜனவரி 11ம்தேதி ( புதன்கிழமை) தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மாங்கல்ய பூஜை நடைபெறுகிறது.
மாங்கல்ய பூஜையில் , திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு நல்ல மணமகனை பெறுவதற்கும், திருமணமான பெண்கள் கணவருடன் நல்ல அன்போடு, பிரிவு ஏற்படாமல் வாழவும், தீர்க்க சுமங்கலி பாக்யம் கிடைக்கவும் மஞ்சள், குங்குமம், மாங்கல்ய சரடு ஆகியவை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. மாங்கல்ய பூஜையில் பங்கேற்கும் பெண்களுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட மாங்கல்ய சரடு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக பீடாதிபதி.டாக்டர்.ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment