வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 17ம்தேதி சனிப்பெயர்ச்சி மஹா யாகம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி தினந்தோறும் பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று வருகிறது.
இது தவிர சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி உள்பட முக்கிய நாட்களின் போது பல்வேறு மஹா யாகங்களும் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வருகிற ஜனவரி 17ம்தேதி செவ்வாய்க்கிழமை திருக்கணிதப்படி சனி பகவான் மகர ராசியிலிருந்து ,கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சி ஆவதை ஒட்டி சனிப்பெயர்ச்சி மஹா யாகம் நடைபெறுகிறது.
சனிப்பெயர்ச்சியை ஒட்டி, உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பாதாளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாதாள சொர்ண (தங்க) சனீஸ்வரருக்கும், நீலாதேவியுடன் , கையில் ஊன்று கோலுடன் அமைந்துள்ள ஸ்ரீஜெயமங்கள சனீஸ்வரருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6மணிக்கு சனிப்பெயர்ச்சி மஹா யாகம் நடைபெறுகிறது.
தற்போதைய சனிப்பெயர்ச்சியை ஒட்டி ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களும், சனி திசை மற்றும் சனி புக்தி நடப்பவர்களும் பரிகாரங்கள் செய்து கொள்வது அவசியம் ஆகிறது.
எனவே பக்தர்கள் இந்த சனிப்பெயர்ச்சி பூஜைகள் மற்றும் மஹா யாகத்தில் பங்கேற்று பயன்பெறுமாறு பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை 15ம்தேதி தமிழர் திருநாளான தைப்பொங்கலை ஒட்டி தன்வந்திரி பீடத்தில் சமத்துவ பொங்கலும், சமய நூல் வழங்கும் விழாவும், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீஅஷ்ட கால மஹா பைரவருக்கு சிறப்பு ஹோமமும் , அபிஷேக பூஜைகளும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment