தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆருத்ரா தரிசனம் , பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு ஹோமம் , அபிஷேகங்கள்
வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி , இன்று ஜனவரி 6ம்தேதி ஆருத்ரா தரிசனம் மற்றும் பௌர்ணமி முன்னிட்டு திறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது.
மாதந்தோறும் பௌர்ணமி நாளில் நடைபெறும் , ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம், குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம் ஆகியவையும், ராகு கேதுவிற்கு சிறப்பு பூஜைகளுடன் அன்னாபிஷேகம், சிவலிங்க வடிவில் உள்ள 468 சித்தர்களுக்கும் , சித்தர்களின் ஞானகுருவான ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மேலும் இன்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வேறு எங்கும் இல்லாத வகையில் பீடத்திலேயே நந்தியுடன் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதலிங்கேஸ்வரர்க்கும் சிறப்பு ஹோமத்துடன் அபிஷேகமும் நடைபெற்றது.
பௌர்ணமி மற்றும் ஆருத்ரா தரிசன சிறப்பு ஹோமங்கள், பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து , பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
----
No comments:
Post a Comment