வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி வைத்து தேச நலம், தேக நலம் வேண்டி பாரத மாதா ஹோமம் உள்பட சிறப்பு ஹோமங்கள், அபிஷேகங்கள்
வாலாஜாபேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி , உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் பக்தர்கள் அனைவரும் வணங்கி சென்றிடும் வகையில் பாரத மாதாவிற்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
4 அடி உயர பீடத்தில் பின்புறத்தில் பாரத நாட்டின் உருவத்துடன் , கையில் தேசிய கொடி மற்றும் சிம்ம வாகனத்துடன் 4அரை அடி உயரத்தில் பாரதமாதாவிற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. தனி சன்னதி கொண்டுள்ள இந்த பாரத மாதாவிற்கு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா நாட்களில் தேசிய கொடி ஏற்றி ஹோமம் , அபிஷேகமும், முக்கிய தினங்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருவது வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று ஜனவரி 26ம்தேதி குடியரசு தின விழா வை முன்னிட்டு , தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் தேசிய கொடி ஏற்றி, தேச நலம், தேக நலம் வேண்டி பாரத மாதாவிற்கு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் ஸ்வாமிகள், பாரத மாதாவிற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தி வைத்தார்.
இந்த ஹோமம் மற்றும் பூஜை, தேசிய கொடி ஏற்றுதல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இனிப்பு வழங்கி , பாரத மாதாவிற்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது குறித்தும், பாரத மாதாவை வழிபட வேண்டியதின் அவசியம் குறித்தும் பேசினார். பின்னர் பக்தர்களுக்கு ஸ்வாமிகள் ஆசி வழங்கினார்.
இது தவிர இன்று ஜனவரி 26ம்தேதி சியாமளா நவராத்திரியில் 5ம் நாளான இன்று ஸ்ரீ அஷ்டபுஜ மரகத ராஜமாதங்கி, ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி ஹோமங்கள், வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து பகவான் ஹோமம், பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக வராஹி ஹோமம் ஆகிய ஹோமங்களும் , ஸ்ரீ ராஜ மாதங்கி,ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி, ஸ்ரீ வாஸ்து பகவான், ஸ்ரீ பஞ்சமுக வராஹி ஆகிய தெய்வங்களுக்கு பஞ்ச திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது.
பூஜைகள், ஹோமங்கள் , அபிஷேகங்களில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து , பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment