Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, January 11, 2023

Samathuva Pongal vizha on 15.1.2023 at sri Danvantri Arokya Peedam

 யக்ஞ பூமியான தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சமத்துவ பொங்கல். சமய நூல் வழங்கும் விழாஇன்று கூடாரவல்லியை முன்னிட்டு மாங்கல்ய பூஜை நடைபெற்றது.

 வாலாஜாபேட்டை,ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி  ஆண்டு தோறும் தமிழர் திருநாளான தைபொங்கல் விழா சமத்துவ பொங்கல்  சமய நூல் வழங்கும் விழாவாக நடைபெற்று  வருகிறது.

இந்த ஆண்டும் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 18 ம் ஆண்டு பொங்கல் விழா சமத்துவ பொங்களுடன் சமய நூல் வழங்கும் விழாவாக வருகிற 15.01.2023 ஞாயிற்று கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற உள்ளது.

பண்டைய காலங்களில் அன்றாடம் ஆன்மீக நூல்கள் படிக்கும் பழக்கமானது அனைத்து மக்களிடமும் இருந்து வந்தது. மேலும் தாங்கள் படித்த அந்த  அன்மீக  கருத்துக்களை பிள்ளைகளிடம், பேரக் குழந்தைகளிடம் கதைகளாக கூறி  ஒழுக்கம் மற்றும் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுத்து வளர்த்து வந்தனர்.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் புத்தகம் படிப்பது என்பது அரிதாகி விட்டது. தாத்தா, பாட்டிகள் கதை சொல்வதும், பெற்றோர்கள்  தங்கள் பிள்ளைகளுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதுவும் மிகவும் குறைந்து விட்டது என்றால் அதில் சந்தேகமில்லை.

 இன்றைய  இளைஞர்களிடம் குருமார்கள் எழுதிய புத்தகங்களை படிக்கும் பழக்கம் உண்டா என்று கேட்டால், குருமார்களா அப்படியென்றால் யார் என்று கேட்கும் நிலை தான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.    தெய்வங்களாலும், குருமார்களாலும் மனித  வாழ்க்கை, ஒழுக்கம்,வளர்ச்சிக்காக எழுதப்பட்ட எண்ணற்ற நூல்கள் உள்ளன. ஏன் இன்னும் அச்சில் ஏறாத பழைய ஓலைச் சுவடிகள் கூட உள்ளன எனலாம்.

அப்பர்,சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவராம், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் போன்ற பன்னிரு திருமுறைகள், மற்றும் கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், கண்ணனின் பகவத்கீதை, மஹாபாரதம், திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், அதே போல் 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம், கிறிஸ்துவின் வேதாகமம், அல்லாவின் குரான் என பலவிதமான நூல்கள் இருந்து வருகின்றன. மேலும் பல மகான்கள் எழுதிய பல்வேறு நூல்களும் உள்ளன. இதுபோன்று ஆன்மிகம் வளரவும், நற்சிந்தனைகள் தழைத்தோங்கவும், அவரவர்களின் மத குருமார்களையும், தெய்வங்களையும் பக்தியுடனும், சிறத்தையுடனும் வழிபட வேண்டியும், நல் ஒழுக்கமும், மனித நேயமும், மத நல்லிணக்கமும், தர்ம சிந்தனைகளும், தழைத்தோங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் குருவருளுடன் வருகிற தமிழர் திருநாளில் 15.01.2023 ஞாயிற்று கிழமை நண்பகல் 12.00 மணியளவில் சமத்துவ பொங்கலுடன் சமய நூல்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

இந்த அற்புதமான விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

கூடாரவல்லி 

 ஆண்டாள்,  பெருமாளை  கணவராக பெற்ற நாளான இந்த கூடாரவல்லி என்பதால்    மார்கழி 27ம்தேதியான  இன்று  ஜனவரி 11ம்தேதி ( புதன்கிழமை) தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு நல்ல மணமகனை பெறுவதற்கும், திருமணமான பெண்கள் கணவருடன் நல்ல அன்போடு, பிரிவு ஏற்படாமல்  வாழவும், தீர்க்க சுமங்கலி பாக்யம் கிடைக்கவும்  மஞ்சள், குங்குமம், மாங்கல்ய சரடு ஆகியவை வைத்து சிறப்பு மாங்கல்ய பூஜை   நடைபெற்றது. பின்னர்  பக்தர்களுக்கு  இலவச மாங்கல்ய சரடு  வழங்கப்பட்டது.  முன்னதாக  பில்வ  பூஜையுடன் ,ஸ்ரீ லஷ்மி சகஸ்ரநாம  பாராயணத்துடன் ஸ்ரீ லஷ்மி குபேரர் ஹோமமும் நடைபெற்றது. 

  மேலும் இன்று தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு  , வராஹி ஹோமமும்,  பால், மஞ்சள், சந்தனம்,திரவிய பொடி , இளநீர், பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.  பின்னர்  பக்தர்கள் வராஹி தீபம் ஏற்றி வழிபட்டனர்.

 ஹோமம், அபிஷேகம் மற்றும்  பூஜையில் பங்கேற்று  ஸ்வாமி தரிசனம்செய்த பக்தர்களுக்கு  பிரசாதமும் வழங்கப்பட்டது. 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.








No comments:

Post a Comment