வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஐந்து நாட்கள் ஐந்து வைபங்கள்
நாளை 26ம்தேதி வாஸ்து நாள் ஹோமம், அபிஷேகம்
நடைபெறுகிறது
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ,ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, ஐந்து நாட்கள் & ஐந்து வைபவங்கள் நடைபெறுகிறது.
இதன்படி நாளை ஜனவரி 26ம்தேதி வியாழக்கிழமை சியாமளா நவராத்திரி வசந்த பஞ்சமியில் மாபெரும் ஸ்ரீ வராகி , ஸ்ரீராஜமாதங்கி,ஸ்ரீபாலாதிரிபுர சுந்தரி ஹோமங்களும், அபிஷேகம், புஷ்பாஞ்சலி சிறப்பு அர்ச்சனை ஆகியவையும், குடியரசு தினத்தை முன்னிட்டு பாரத மாதாவிற்கு சிறப்பு ஹோமம் பூஜைகளும் நடைபெறுகிறது. மேலும் நாளை 26ம்தேதி வாஸ்து நாளை முன்னிட்டு காலை 10 மணி முதல் 1 மணி வரை வாஸ்து பகவான் ஹோமம் ,அபிஷேகம் மற்றும் அஷ்டதிக் பாலகர் பூஜை ஆகியவையும் நடைபெறுகிறது
27ம்தேதி வெள்ளிக்கிழமை 21 அடி உயர ஸ்ரீ விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர் பகவானுக்கு முதலாமாண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் விஷேச திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
28ம்தேதி சனிக்கிழமை ரதசப்தமியை முன்னிட்டு 7 குதிரைகளைக் கொண்டு அஸ்வமேத பூஜையுடன் லட்ச ஜப அஸ்வாரூடா யாகம் தொடங்குகிறது. 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை லட்ச ஜப அஸ்வாரூடா யாகம் மஹா பூர்ணாஹுதி நடைபெறுகிறது.
வருகிற 30ம்தேதி திங்கள்கிழமை ஷியாமளா நவராத்திரி நிறைவு பெறுவதை முன்னிட்டு ஸ்ரீ ராஜ மாதங்கி தேவிக்கு சிறப்பு ஹோமம், பூஜை மற்றும் சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெறுகிறது.
முன்னதாக சியாமளா நவராத்திரியில் 4ம் நாளான இன்று 25ம்தேதி புதன்கிழமை, ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமமும்,சிறப்பு அபிஷேக பூஜைகளும் நடைபெற்றது.
ஹோமங்கள், பூஜைகள், அபிஷேகங்களில் பங்கேற்கும் பக்தர்களுக்கு , பூஜை பிரசாதங்கள் மற்றும் அன்ன பிரசாதம் வழங்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment