வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தைமாத கிருத்திகை, சியாமளா நவராத்திரி நிறைவு ஸ்ரீ கார்த்திகை குமரன், ஸ்ரீ அஷ்டபுஜமரகத ராஜமாதங்கி சிறப்பு அபிஷேகங்கள்
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். முரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நித்ய ஹோமங்கள், அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இன்று ஜனவரி 30ம்தேதி திங்கள் கிழமை தை மாத கிருத்திகையை முன்னிட்டு வேறு எங்கும் காண முடியாத வகையில் பீடத்திலேயே கார்த்திகை பெண்களுடன் அமைந்துள்ள ஸ்ரீகார்த்திகை குமரனுக்கு பால், மஞ்சள்,சந்தனம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றது.
முன்னதாக சியாமளா நவராத்திரியில் நிறைவு நாளான இன்றும் (திங்கள்கிழமை) ராஜமாதங்கி ஹோமம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீஅஷ்ட புஜ மரகத ராஜமாதங்கிக்கு பஞ்ச திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றது.
ஹோமம் , அபிஷேகம் , பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து பீடாதிபதி டாக்டர்.முரளிதரஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.
வருகிற பிப்ரவரி 1ம்தேதி புதன்கிழமை ஏகாதசியை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு ஹோமமும், நெல்லிப்பொடி அபிஷேகமும் நடைபெறுகிறது,.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.