Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, August 6, 2013

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மஹாசண்டி யாகம்

ஆகஸ்ட் 11, 2013 ஞாயிற்றுக்கிழமை அன்று கருடபஞ்சமியை முன்னிட்டும், அன்றைய தினம் ஆடி கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் புதுச்சேரியை சேர்ந்த தன்வந்திரி குடும்பத்தினரால் மஹாசண்டி ஹோமம் நடத்தப்பட உள்ளது.

மேலும் இந்த ஆடி மாதத்தில் மகிசாசுரமர்த்தினிக்கு தினமும் இடைவிடாது நடைபெற்று வந்த புனிததீர்த்த அபிஷேகமானது பூர்த்தியாகி, அம்பாளுக்கு 21 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு அம்பாள் சிறப்பு அலங்கார தோற்றத்தில் அருள் பாலிப்பாள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் காட்சியை காண கண்கோடி வேண்டும் என்பதால் பக்தர்கள் அனைவரும் சண்டி யாகத்தில் கலந்து கொண்டு, அம்பாளையும் தரிசனம் செய்து அம்பாளின் அனுக்கிரகத்தையும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியையும் பெற்று பயன்பெற வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இந்த சண்டி ஹோமத்தில் கலந்துகொள்வதினால் ஏற்படும் பலன்களை பற்றி பார்ப்போம்.
  • ஏழ்மை வராது
  • அன்பு கிடைக்கும்
  • எதிரிகள், இயற்கையால் ஆபத்து உண்டாகாது
  • ஸுவாஸினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டான சாபம் நீங்கும்
  • விவசாயத்தில் நற்பலன் கிட்டும்
  • கல்வி ஞானம் பெருகும்
  • உத்யோக உயர்வு
  • திருமணமாகாதவர்களும் நல்ல இல்லறம் அமையும்.
  • குழந்தைபாக்யம் விரைவில் கிடைக்கும்
  • மன அமைதி கிடைக்கும்.
  • தேக ஆரோக்கியம்
  • ராகு கேது பகவானைத் திருப்திப்படுத்த முடியும்.
  • குரு ஆசீர்வாதம் கிடைக்கும்
  • பித்ரு சாபங்கள் நீங்கும்
  • சர்வ ஐஸ்வர்ய சித்தி கிடைக்கும்
  • மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்
  • படிப்பில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்
  • சர்வரோக சாந்தி கிடைக்கும்
  • நீண்ட ஆயுள் கிடைக்கும்
  • நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்
  • கிரக தோஷங்கள் விலகும்
  • பூகம்பம், இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கும்,
  • நல்ல மழை பெய்து விவசாயம் பெருகும்
  • வியாபாரம் செழிக்கும்
  • பஞ்சம், பிணி அகலும்
இதுபோன்ற எண்ணற்ற நன்மைகளை சண்டி ஹோமத்தில் கலந்துகொள்வதினால் கிடைக்க பெற்று வாழ்வில் வளம்பெற அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
www.dhanvantripeedam.com
www.danvantripeedam.blogspot.in
E-mail : danvantripeedam@gmail.com

No comments:

Post a Comment