Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, August 1, 2013

ஆகஸ்ட் 6, 2013 செவ்வாய்க்கிழமை அன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்

அமிர்த சஞ்சீவினி ஹோமம் மற்றும் சண்டி யாகம்…


சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. இதில் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும். 

ஆடி அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், அரிசி, தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து பிறகு ஆலயங்களுக்கு சென்று வருதல் நல்லது. பித்ருக்கள் மனம் மகிழ்ந்தால்,நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும். ஆடி அமாவாசை தினத்தில் தான் நமது பாவங்கள் விலகுவதாக கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட விசேஷ தினத்தை முன்னிட்டும் அம்மனுக்கே உரிய மாதம் என்பதாலும் இந்நாட்களில் செய்யப்படும் பூஜைகளுக்கும், யாகங்களுக்கும் பலன்கள் அதிகம் உள்ளது என்பதாலும், இந்நாட்களில் ராகு கேதுவுக்கு விசேஷ பூஜை செய்தால் தடைபெற்ற காரியங்கள் அனைத்தும், ராகு தசை, ராகு புக்தி. சனி தசை, சனி புக்கி போன்ற நவக்கிரஹங்களால் ஏற்படும் தோஷங்கள் அகலும் என்றும், பித்ரு தோஷம், நாக தோஷம், காலசர்பம் போன்ற தோஷங்களுக்கு நிவாரணத்திற்குரிய தினமாகவும் போற்றப்படுகிறது.

இதனை முன்னிட்டு கயிலை ஞானகரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சிறப்பு ஹோமமாக அமிர்த சஞ்சீவினி ஹோமம் மற்றும் மஹா சண்டி யாகத்தையும் விசேஷ திரவியங்களை கொண்டு காலை 10.00 மணியளவில் நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment