அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியால் இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளதை பார்க்கும் பொழுது 1991ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை நினைவுகூற வைத்துள்ளதாக இந்திய மக்கள் கருதுகின்றனர். இதனால் இந்திய மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலூம் இது முதலீட்டாளர்களின் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தப் படுவதாலும் வங்கிகளுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் டாலரின் தேவை அதிகரிப்பதாலும் கீழ்கண்ட காரணங்களாலும் இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணம் என்று மக்கள் கருதுகிறார்கள்.
- கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றை அதிகமாக இறக்குமதி செய்வது.
- கூட்டமைப்புத் திட்டங்களில் ஆர்வம் காட்டாமலிருப்பது.
- பணக்காரர்கள் தங்கம் மற்றும் வீட்டுமனைகள் வாங்குவது.
இந்திய பொருளாதார வீழ்ச்சியை தடுக்கும் விதத்திலும், இந்தியாவின் நன்மதிப்பிற்கு கலங்கம் ஏற்படாமல் இருக்கவும், இந்திய முதலீட்டாளர்களின் அச்சம் தவிர்த்து தாராளமாக முதலீடு செய்யவும், இந்திய மக்களின் பொருளாதார வீழ்ச்சி பயம் நீங்கவும் வேண்டி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 01.9.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் இழந்த பொருளை மீட்டுக்கொடுக்கும் கடவுளான ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜூனரை வழிபடும் விதத்திலும், ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜூனர் ஹோமமும், சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும், கூட்டுபிரார்த்தனையும் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment