Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, July 12, 2013

சத்ருக்களை ஒழிக்கும் சக்கரத்தாழ்வார் ஹோமம்...

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
17.7.2013 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் சுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு
சுகம்பல தரும் சுதர்சன ஹோமம்
நம்மை காக்கும் கடவுளான திருமால் நான்கு திருக்கரங்களுடன் திகழ்பவர்.வலது கரத்தில் சக்கரம். இடது கரத்தில் சங்கு மற்றும் வலது கையில் அபய ஹஸ்தம் காட்டியபடியும். இடது கரத்தில் கதையுடனும் காணப்படுகிறார். இதைத் தவிர அவருக்கு நந்தகம் என்ற கத்தி மற்றும் வில், அம்புகளும் ஆயுதங்களாக உள்ளன. எனவே அவரை பஞ்ச ஆயுதம் கொண்டவர் என்றும் போற்றுவர். திருமால் இப்படி ஆயுதங்களுடன் காட்சியளிப்பது பக்தர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான். ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு ஆயுதத்தையும் தேவையானபோது எல்லா ஆயுதங்களையும் அவர் உபயோகிப்பார். இந்த வகையில் முதன்மை பெறுவது சக்கராயுதம் ஆகும். சக்கராயுதத்துக்கு வழங்கப்படும் கவுரவம் மிக உயர்ந்தது. இவர் சக்கரத்தாழ்வார் என்றே போற்றப்படுகிறார். திருமாலைச் சென்றடையும் மார்க்கத்தை நமக்குக் காட்டுபவர் இவர். உக்ரம் கொண்டவராயினும் கருணை நிரம்பியவர் சக்கரத்தாழ்வார்.


சுதர்சனமும் மகாவிஷ்ணுவின் அம்சமே. நான்கு, ஆறு, எட்டு கரங்கள் மட்டுமின்றி 16, 32 கரங்கள் கொண்ட சக்கரத்தாழ்வாரை பல்வேறு திருக்கோலங்களில் காணலாம். வீறுகொண்ட கோலத்தில் ஷட்கோண சக்கரத்தில் ஜ்வாலைகளுடன் கூடிய அமைப்பில் சக்கரத்தாழ்வாரின் வடிவங்கள் அமைந்திருக்கும். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பிரதிஷ்டை செய்துள்ள சக்கரத்தாழ்வரை சுகம் பல தரும் சுதர்ஷண ஆழ்வார் என்று அழைக்கப்படுகிறது. சுதர்சனாழ்வார் பின்னால் நரசிம்மர் பிம்பம் கிடையாது. மிகவும் சிரித்த முகத்துடன் அபயம் என்றவுடன் ஓடிவந்து அருள்புரிய கூடியவராக அமைந்துள்ளார் என்பது மிகவும் சிறப்பு. மேலும் இவருக்கு 108 சுதர்சன சாலிகிராமம் சாற்றப்பட்டு உள்ளது மிகவும் சிறப்பு. இது ஒரு விசேஷமான அமைப்பு.
சக்கரத்தாழ்வாரின் வலது கைகளில் சக்கரம். பரசு என்ற மழு. குந்தம் என்ற ஈட்டி, தண்டம், அங்குசம், சதமுகாக்னி கட்கம் என்ற பட்டாக கத்தி வேல் இடது கைகளில் பாசக்கயிறு ஸுராயுதம் கதை மற்றும் ஹலம். முஸலம் என்ற ஆயுதங்கள் இருக்கும் சிற்சில இடங்களில் இவற்றில் மாற்றமும் தென்படும். ஞானம் வழங்குபவரான இவர் ஆரோக்கியம். செல்வம், எதிரிகளிடமிருந்து விடுதலை. பில்லி. சூன்யம், ஏவல் போன்வற்றிலிருந்து நிவாரணம் என்று பல வரங்களை வழங்குபவர். எல்லாவற்றுக்கும் மேலாக திருமாலின் அம்சமான இவர் மோட்ச சாம்ராஜ்ஜியத்தையும் அளிப்பவர்.

இத்தனை சிறப்பு பெற்றுள்ள சக்கரத்தாழ்வாருக்கு வருகிற 17.7.2013 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் உலக நலன் கருதி மஹா சுதர்சன ஹோமமும், திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
வாலாஜாபேட்டை,வேலூர் மாவட்டம்.
செல் :9443330203

No comments:

Post a Comment