ஸ்ரீதன்வந்திரி பீடத்தின் கொடி:ஒவ்வோர் அரசாங்கத்துக்கும் ஒரு கொடி உண்டு. பிரபலமான ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு டிரேட் மார்க் (முத்திரை) அதாவது & சின்னம் உண்டு. தங்களது பொருட்களைப் பிரபல்யப்படுத்தும்போது அந்த முத்திரை பிரதானமாக இருக்கும். அதைப் பார்த்த மாத்திரத்திலேயே ‘ஓ... இது இந்த கம்பெனியின் தயாரிப்பு’ என்று வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வர். அதுவும் உலக அளவில் தரச் சான்றிதழ்கள் வாங்கிய தன்வந்திரி பீடத்துக்கும் ஒரு கொடி & அதாவது அடையாளம் வேண்டாமா? உலக மக்களின் நலனுக்காக அவர்களின் நோய், நொடிகளைத் தீர்த்து வைத்து அவர்களை சகல சௌபாக்யங்களுடன் வாழ வைக்கும் வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் அடையாளமாக ஒரு கொடி உருவாக்கப்பட்டுள்ளது.
நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் ஓர் உருண்டைப் பந்து. அதன் காரணமாக வெளிச்சுற்று ஒரு வட்டம். மேலும் இன்னொரு கருத்து பூமியென்னும் வட்டத்துக்குள் முக்கோணத்துக்குள் தன்வந்திரி பகவான்... ‘சத்வம், ரஜோ, தமோ எனும் முக்குணங்களால் அமைந்த மனிதர்களே... உங்களுக்கு வாதம், பித்தம், கபம் என்னும் முத்தோஷங்களால் ஏற்படக்கூடிய நோய்களிலிருந்தும் காத்தருள இதோ நான் இருக்கிறேன்’ என்று சொல்வதைப் போல இவ்வுருவம் அமைந்துள்ளது. இந்தக் கொடி ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் 2007இல் சிறப்பாக நடைபெற்ற ருத்ர ஹோமத்தன்று கூனம்பட்டி ஆதீனம் முன்னிலையில் பீடத்தின் முன் ஏற்றப்பட்டது.
No comments:
Post a Comment