ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள
குரு பீடத்தில் குரு பூர்ணிமா - 2013
குருபூர்ணிமா
22.7.2013 திங்கட்கிழமை
பௌர்ணமி நாளான அன்று வியாச குரு பூர்ணிமாவாகக்
கொண்டாடப்படுகிறது. இந்த பூமியில் அவதரித்து,
உள்நிலை மாற்றத்திற்கான அறிவை வழங்கிய ஞானமடைந்த
குருமார்களைக் கொண்டாடும் விதமாக இந்தநாள் அமைந்திருக்கிறது.
'குரு' என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு
'இருளை விலக்குபவர்' என்று பொருள். குரு
நம்மிடமுள்ள அறியாமையாகிய இருளை அகற்றி, ஞானோதய
மார்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
இந்த வகையில் ஆன்மிகம்,
யோகா என இரண்டற கலந்து நம்மையெல்லாம் நல்ல பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிற
நமது குரு கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
புத்தர், ரமணர், குருநானக், ஸ்ரீ ராகவேந்திரர், காஞ்சி மகா பெரியவர், வள்ளலார், மகா அவதார் பாபா, சீர்டி சாய்பாபா, குழந்தையானந்த
மகாசுவாமிகள், சேஷாத்ரி ஸ்வாமிகள், மகாவீரர் என அனைத்து குருமார்களையும் பிரதிஷ்டை செய்து நம்
அனைவருக்கும் குருவருள் கிடைப்பதற்கு வழிவகை செய்துள்ளார்.
மேலும் அன்றைய
தினத்தில் சரஸ்வதி, கார்த்தவீர்யார்ஜூனர், தக்ஷ்ணாமூர்த்தி, தத்தாத்ரேயர், லக்ஷ்மி ஹயக்ரீவர்
போன்ற தெய்வங்களை வழிபடுவது மாணவ, மாணவியர்களுக்கு கல்வி வளம் மேம்படும்.
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில் அமைந்துள்ள அனைத்து சித்த குருமார்களுக்கும், இதர 468 சித்தர்களுக்கும்
குரு பூர்ணிமாவை முன்னிட்டு சிறப்பு ஹோமங்களும், கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெற உள்ளது.
மேலும் திங்கட்கிழமை அன்று வியாச குருபூர்ணிமா வருவது இன்னும் சிறப்பு ஆகும். எனவே
இந்த வைபவத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகளின் அருளையும், குருமார்களின் அருளையும் பெற்று வாழ்வில் சகல செளபாக்கியங்களும்
பெற வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
நிதயே
சர்வ வித்யானாம்
பிக்ஷஜே
பவ ரோகினாம்
குருவே
சர்வ லோகணாம்
தக்ஷணாமூர்த்தியே
நம
குரு மந்திரம் விளக்கம்
அனைத்து ஞானங்களின் தலைவனே..
அறியாமை எனும் நோயை தீர்க்கும் மருத்துவனே
எங்கும் வியாபித்து இருப்பவனே
தென்திசை நாயகனே உன்னை வணங்குகிறோம்.
No comments:
Post a Comment