ஸஹஸ்ரார்ஜூனர்
மகா விஷ்ணுவின் சுதர்சன பகவானின் மறு அவதாரமும் கத்ரி சமுதாய குலாதிபதியுமான க்ஷத்ரிய மாமன்னரும், ஆயுரம் கையுடையான் என்று அழைக்கப்படுபவரும், ராஜ ராஜேஸ்வரன் என்று அழைக்கப்படுபவரும், பரசுராமரிடம் போரிட்டு தோல்வி கண்டவரும் மகாராஜாவுமான ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜூனர் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இழந்த பொருட்களை மீட்டுக் கொடுக்கும் இறைவனாக பச்சைக்கல்லால் 16 திருக்கரங்களைக் கொண்டு 16 விதமான ஆயுதங்களுடன் சுதர்சன சக்கரத்துடன், காலில் பாதரக்ஷை கொண்டு பார்த்தசாரதி பெருமாள் போன்று மீசையுடன், கதையுடன், சங்கு சக்கரத் தாரியாக கார்த்தவிர்யார்ஜூனர் யந்திரத்துடன் 16 செல்வங்களும் நாம் பெறும் விதத்தில் காட்சித்தரும் திருக்காட்சியுடன் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பிரதிஷ்டை செய்துள்ளார்.
இவர் தத்தாத்ரேயருடைய நம்பிக்கைக்குரிய சீடரும் ஆவார்.
இவருக்கு உதயபூர், குவாலியர், மாகேஷ்வர்போன்ற பல இடங்களில் வெவ்வேறு திருநாமங்களுடன் இவரை அழைத்து வழிபடுகின்றனர்.
No comments:
Post a Comment