ஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும்
அன்னை தேவி லலிதா ஸஹஸ்ர நாம ஹோமம்
ஸ்ரீ லலிதாம்பிகை
தேவி மஹிமை :
இரகசியங்களுக்கு
எல்லாம் ரகசியமானதும், லலிதாம்பிகைக்கு
ஸ்ரீ லலிதா ஸஹச்ர நாமத்தை பாராயணங்கள் செய்பவர்களுக்கு சகல வியாதிகளையும் தீர்த்து
விடும்.. சர்வ ஸம்பத்துகளையும் அதிகரிக்கச் செய்யும். சகல விதமான அகால
மிருத்யுவையும் அடக்கி விடும். கால கிரமத்தில் ஏற்படக்கூடிய மரணத்தையும் நீக்கி
விடும் என்கிறது புராணங்கள். சகல விதமான ஜ்வரங்களால் ஏற்படும் கஷ்டங்களை நீக்கி
விடும். தீர்க்கமான ஆயுளைக் கொடுக்கும். பிள்ளையில்லாதவர்களுக்கு புத்ர ஸம்பத்தைக்
கொடுக்கும். புருஷார்த்தத்தையும் கொடுத்து பேருதவி புரிபவள் இவளே.
ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயண ஹோமம் :
நம் கஷ்டங்களெல்லாம் தீர்க்கும் அகில உலக அன்னையான ஸ்ரீ லலிதா தேவியின் அருள் பெறவும், கலியுகத்தின் காக்கும் தேவியாக உள்ள அவளின் கருணையை பெற வேண்டியும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி வருகிற 17.08.2018 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம ஹோமம் நடைபெறுகிறது.
ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயண ஹோமம் :
இதில் வரும் ஒவ்வொரு நாமாக்களும் அதிசயமான அரிய பல அனுகூல பலன்களை தர வல்ல தாரக
மந்திரங்களாகும். ‘ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம
பாராயண ஹோமம்’ நினைத்த காரியங்கள் கைகூட பேருதவி புரியும். ஆரோக்யம், பேய், பிசாசு, பில்லி, சூனியம்
முதலிய உபாதைகளிலிருந்து விடுதலை பெறலாம். விஷ தோஷங்களிலிருந்து நிவாரணம் பெறலாம். திருமணம், அன்யோன்ய தாம்பத்ய
வாழ்க்கை, தன, தான்ய, ராஜ்ய வசியம் போன்ற பலப்பல காரியங்களில் வெற்றி பெறலாம். மேலும் ஸ்ரீலலிதா
சஹஸ்ரநாம பாராயண ஹோமத்தால் தன்
விருப்பத்திற்கேற்ற கணவனை அடையவும் மூவகை
சித்திகளான இச்சா சக்தி, க்ரியா சக்தி, ஞான சக்தி பெற்று தெய்வீக அருளுடன், சகல சௌபாக்கியங்கள்,
செல்வங்கள், விருப்பத்திற்கு ஏற்ற பொருள் கிடைத்து (அறம், பொருள், வீடு, இன்பம் ஆகிய நான்கு வித புருஷார்த்தங்களை பெற்று சிறப்புடன் வாழலாம்.
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் ஒரு வரபிரசாதமாகும் :
இவை மற்றுமில்லாமல் காரிய தடைகள் நீங்கவும், வியாதிகள் விலகவும், நிலம்,
வீடு, மனை வாங்க கட்ட, தோஷங்கள்
அகலவும், வீட்டில் சுகமும்
ஆரோக்யமும் பெற்று வழக்குகள்
இல்லாமல் சுமுகமாக மகிழ்ச்சியுடன் இருக்கவும், சுக பிரசவம் உண்டாகவும், தன தான்யத்தை
பெருக்கவும், சுவாசம் சம்பந்தமான
ரோகங்கள் குணமடையவும்,
தூய்மையான மனப்பக்குவம் பெறவும்,
தம்பதிகளிடையே நல்ல
உறவு ஏற்படவும், தோஷங்கள் விலகி நன்மை பெறவும் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணமும், ஹோமமும் ஒரு வரபிரசாதம் ஆகும்.
லலிதாம்பிகைக்கு உரிய நைவேத்யங்கள் :
தேன் கலந்த பால், சர்க்கரை பொங்கல், நெய் கலந்த பலவித பட்சணங்கள்,
தேங்காய், திராட்சை, கல்கண்டு, குங்குமப்பூ, சர்க்கரை கலந்த வெல்லம், தேங்காய், தேன், பருப்பு,
வாழைப்பழம், தாம்பூலம், இளநீர்,
பழம், திராட்சை, முந்திரி,
கல்கண்டு, சர்க்கரை பொங்கல், சித்திரான்னம், பஞ்சாமிர்தம், ஆறுவகை
பட்சணங்கள் (அறுசுவை அடங்கியவை), கருணைக் கிழங்கு அல்வா, மேலும் பல விசேஷ நைவேத்யங்கள் யாகத்தில் சேர்க்கப்பட உள்ளன்.
லலிதா ஸஹச்ர நாம பாராயண ஹோமத்திற்கு உரிய மலர்கள் :
ரோஜா, பிச்சி, அரளி, சாமந்தி, முல்லை, மல்லி, சம்பங்கி, தவனம், மஞ்சள் அரளி, மஞ்சள் ரோஜா, மற்றும் பலவகை ரோஜாக்கள், தாமரை மலர்கள், மகிழம்பூ, செண்பகப்பூ, செம்பருத்தி, மருவு போன்ற பல்வேறு வகையான புஷ்பங்கள் சேரக்கப்பட உள்ளது.
மேற்கண்ட யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மஞ்சள் குங்குமத்துடன் சௌபாக்ய பொருட்கள்,
வாசனாதி திரவியங்கள், மூலிகை திரவியங்கள்,
பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன்
கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment