Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, August 5, 2018

Skanda Homam...


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
ஆடி கிருத்திகையை முன்னிட்டு

ஆறுமுக ஹோமம்

நடைபெற்றது. 

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞனகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 05.08.2018 ஞாயிற்றுக்கிழமை ஆடி கிருத்திகையை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆறுமுக ஹோமமும், பீடத்தில் நடைபெற்றுவரும் கோடி ஜப தன்வந்திரி ஹோமத்துடன்  நடைபெற்றது.

இந்த யாகத்தில் சட்ட சிக்கல்களிலிருந்து விடுபடவும், நோய்கள் மற்றும் எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெறவும், மன அமைதி கிடைக்கவும், செல்வ செழிப்பை பெறவும், வெற்றி இலக்கை பெறவும், கடன்களுக்கு தீர்வும், நோய்கள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கவும், முயற்சிகளிலும் வெற்றி பெறவும், உங்களது அனைத்து பணிகளிலும் வளர்ச்சியை காணவும், வாழ்வில் தடைகளை நீக்கி விருப்பங்கள் நிறைவேற்றி, பூமி சம்பந்தமான தொழிலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவும். பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.




No comments:

Post a Comment