தன்வந்திரி பீடத்தில்
மக்கள் மன சாந்தி பெற, சாந்தி துர்கா ஹோமம்.
(நாளை 10.08.2018ல் ஆடி வெள்ளியை
முன்னிட்டு நடைபெறுகிறது)
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி
நாளை 10.08.2018 ஆடி வெள்ளியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு சாந்தி துர்கா ஹோமம் நடைபெறுகிறது.
சாந்தி துர்கா ஹோமத்தின் பலன் :
இந்தியாவின் பல பகுதிகளில் இவளுடைய பக்தர்கள் பல்வேறு விதமான முறைகளை வழிபாடு
செய்கிறார்கள். பாவங்களை நீக்கி, பயத்தையும்,
எதிரிகளையும் அழித்து நம்மை காப்பவள். துர்காதேவி.
அதர்வண வேதத்தில் துன்பங்களிலிருந்து நம்மை காப்பவள் என்பதால் துர்கா என பெயர்
வந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இக்கட்டான நிலையில் சிக்கித் தவிப்பவர்களையும்,
தீராத துன்பங்களால் விரக்தி அடைந்து இருப்பவர்களையும் இவள்
காப்பாற்றுவாள். இவளை வழிபடுபவர்களுக்கு மன அமைதியை தருபவதால், சாந்தி துர்கா என யார் கூறினாலும் அவர்களுக்கு அமைதி கிடைக்கும்.
துர்க்கையை, வனதுர்கா, சூலினி துர்கா, ஜாதவேதோ துர்கா, சபரி துர்கா, ஜ்வால துர்கா, தீப
துர்கா, லவண துர்கா, ஆசூரீ துர்கா,
சாந்தி துர்கா, என ஒன்பது வடிவங்களாக நவதுர்கா
என்ற பெயரில் வணங்குகின்றனர்.
இந்த ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கும், வழிபடும் பக்தர்களுக்கும் வரும் துன்பங்களை நீக்கி மன சாந்தி தருபவளே, சாந்தி துர்கா தேவியாகும். எப்படிப்பட்ட துன்பங்கள், கஷ்டங்கள், பிரச்சனைகள்,
இருந்தாலும் அதை தடுத்து நிறுத்தும் சக்தி இந்த யாகத்திற்கு உண்டு.
மேலும் வீரத்திற்கு எடுத்துக்காட்டான தெய்வம் இவள். ஆண், பெண்
அனைவருக்கும் தைரியம் அளித்து, பலவகையான போராட்டங்களில் இருந்து
வெளிவர இந்த சாந்தி துர்கா தேவி யாகம் வழிவகை செய்யும். இந்த
யாகத்தின் மூலம் தீய எண்ணங்கள் இடைஞ்சல்கள், நீங்கி
ஆரோக்யம் பெறலாம்.
இதில் பங்கேற்க விரும்பவர்கள் மஞ்சள், குங்குமம், விசேஷ திரவியங்கள், பூசணிக்காய், சௌபாக்ய பொருட்கள், எலுமிச்சம் பழம், மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், , மூலிகைகள், அபிஷேக
திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை,
பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள்
கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள்
பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment