வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்முன்னாள் தமிழக முதலமைச்சர்,டாக்டர் கலைஞர். மு. கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி.
தமிழகத்தின் முதுபெரும்
அரசியல் தலைவர், டாக்டர் கலைஞர். மு. கருணாநிதி அவர்கள் தமிழகத்தில் 5 முறை முதலமைச்சர் ஆகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினர் ஆகவும் இருந்தவர்.
தெளிவான சிந்தனை
கொண்ட மாபெரும் தலைவர், தமிழுக்கும் தமிழின மக்களுக்கும் பெருமை சேர்த்தவரும், தமிழ்
மொழியை உலகறிய செய்தவர், அரசியல், சினிமா, இலக்கியம், அனைத்திலும் ஈடுபாடு கொண்டு எண்ணற்ற
சாதனைகள் படைத்தவர். இவர் நேற்று மாலை 6.10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவ மனையில்
மரணமடைந்தார். அவருடைய ஆத்மா சாந்தி அடையவும், அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறவினர்கள்,
கழக நிர்வாகிகள், உடன் பிறப்புகள், தொண்டர்கள், விசுவாசிகள் மன அமைதி பெறவும் தன்வந்திரி
பீடத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment