Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, August 10, 2018

Aishwarya Mahalakshmi Yagam....

21.09.2018 வெள்ளிக்கிழமை

 காலை 6.00 மணி முதல் 2.00 மணி வரை சுக்ரஹோரையில்

ஆரோக்ய பீடத்தில் - ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி யாகம்.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 21.09.2018 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் நன்பகல் 2.00 மணி வரை சுக்கிர ஹோரையில், 16 விதமான செல்வங்களை பெற ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி யாகம் நடைபெறுகிறது.

ஐஸ்வர்யம் என்ற பெயருடன் உலகிலுள்ள அனைத்து செல்வங்களிலும் குடி கொண்டிருப்பவள் மகாலட்சுமி ஆவாள். அவள் தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், வைராக்யம், தைர்யம், வெற்றி, மன அமைதி. என அனைத்தையும் அனைவருக்கும் வழங்கி வருபவள். அவளே தனலட்சுமி, தான்யலட்சுமி, தைர்யலட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, கஜ லட்சுமி என இந்த எட்டு நிலைகளிலும் அருள் புரிந்து வருகிறாள். அவளை வழிபடுவதால் அஷ்ட ஐஸ்வர்யம் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் அருள் புரிந்து வருகிறாள். இத்தகைய சிறப்புகளுடைய தெய்வத்தின் அருள் பெற மேற்கண்ட ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி யாகம் தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி நடைபெற உள்ளது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன்னுடைய பெற்றோருக்காக ஆலயம் அமைத்து அன்றாடம் பல்வேறு விதமான ஹோமங்கள் பக்தர்களின் நலனை கருதி செய்து வருகிறார். இப்பீடத்தில் கடந்த 14 ஆண்டுகளாக அணையா யாக குண்டத்தில் பக்தர்கள் திருக்கரங்களால் அவரவர்கள் பிரார்த்தனைகள் நடைபெற ஸ்வாமிகளின் ஆசி பெற்று மூலிகை பொருட்களை யாகத்தில் சேர்த்து பிரார்த்தனை செய்து பலன் அடைந்து வருகின்றனர்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தன்வந்திரி பீடத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி உலக நலனுக்காக நடைபெறும் ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி யாகத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு இங்கு பிரதிஷ்டை செய்துள்ள ஆரோக்ய லக்ஷ்மியையும், குபேர லக்ஷ்மியையும் வழிபடுவதால் தேக ஆரோக்கியம் கிடைத்தல், திருமணத்தடை நீங்குதல், குழந்தை பாக்கியம் பெறுதல், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு நீங்கப்பெறுதல், செல்வவளம், ஞானவளம், அரசியலில் உயர் பதவி கிடைக்கப்பெறலாம். இது இங்கு வருகை புரிந்து யாகத்தில் பங்கேற்கும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.

குறிப்பாக இந்த யாகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து பங்கேற்பதற்கு ஏற்ற ஒரு யாகம் ஆகும். தங்கம், வெள்ளி நகைகள் செய்பவர்களுக்கு தோஷங்கள் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த தோஷங்களை அகற்றுவதற்கு இந்த யாகத்தில் சங்கல்பம் நடைபெறுகிறது. மேலும் காமத்திற்கு அதிபதியான சுக்ரன் ஜாதகத்தில் சரியாக இல்லையனில் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் காரியத்தடையும், மனக்குழப்பமும், பொருளாதார வீழ்ச்சியையும், திருமணத் தடையும், குழந்தையின்மையும், வியாபார வீழ்ச்சியையும் ஏற்படுத்துவார். எனவே, சுக்கிரதோஷம் நீங்கிட சுக்கிரனுக்கு அதிபதியான மஹாலக்ஷிமியை சுக்ர ஹோரையில் நடைபெறும் இந்த ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி யாகத்தில் பங்கேற்று, ஆரோக்ய ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கும், குபேர லக்ஷ்மிக்கும் நடைபெறும் அபிஷேகத்தில் பங்கேற்று பலன் பெறலாம். மற்றும் திருமணம் நல்லபடியாக நடப்பதற்கும், குழந்தை பாக்கியத்திற்கும், தம்பதியர் ஒற்றுமை மேலோங்கவும், மாங்கல்ய பலம் ஏற்படவும், திருமணத் தடை நீங்கவும், ஐஸ்வர்ய யோகம் கிடைக்கவும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வதற்கு இந்த யாகத்தில் சங்கல்பமும், கூட்டு பிரார்த்தனையும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற உள்ளது.

கலிகாலத்தில் கலிதோஷங்கள் நீங்க தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுடன் ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி, ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி, ஸ்ரீ மரகதாம்பிகை, ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீ சரஸ்வதி தேவி, ஸ்ரீ ஐஸ்வர்ய குபேர லக்ஷ்மி, ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி என 75 பரிவார மூர்த்திகளுடன், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுடன் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆன்ந்தம் அருளும் அற்புத நிவாரண ஸ்தலமாக விளங்கி வருகிறது வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் மேற்கு வாசல், கிழக்கு வாசல், வடக்கு வாசல் என்ற மூன்று நுழைவாயில்களுடன் 6 ஏக்கர் நில பரப்பில் மூலிகை வனங்களுடன் கோ சாலை, வைத்திய சாலை, யாக சாலை, பாக சாலையுடன் தட்சிணாமூர்த்தி, வாஸ்து பகவான், அஷ்ட பைரவர், கால பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர், பாரத மாதா, மஹா அவதார பாபா, சஞ்சீவீ ஆஞ்சநேயர், கார்த்தவீர்யார்ஜுனர், தத்தாத்ரேயர், என 75 சன்னதிகளுடன் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுபேட்டையில் அமைந்துள்ளது. மேலும் இப்பீடத்தில், எங்கும் காணாத வகையில் 9 நவக்கிரகம் 27 நக்ஷத்திரங்களுக்குரிய விருட்சங்களை கொண்டு காலசக்கர வடிவில் அமைத்து அவப்பொழுது 27 நக்ஷத்திரங்களுக்குரிய யாகங்களும் இங்கு நடைபெற்று வருவது ஒரு தனி சிறப்பாகும்.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் மஞ்சள், குங்குமம், விசேஷ திரவியங்கள், பூசணிக்காய், சௌபாக்ய பொருட்கள், எலுமிச்சம் பழம், மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், , மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment