தன்வந்திரி பீடத்தில்
திருமகள் அருள் தரும்திருவாதிரை நக்ஷத்திரத்தில்
சொர்ண பைரவருக்குஸஹச்ர நாம அர்ச்சனையுடன்
சிறப்பு ஹோமம்.
ஸ்ரீ சொர்ணாகர்ஷண
பைரவர் சிறப்பு :
உலகில்
வாழ்ந்து வரும் மாந்தர்கள் அனைவரையும் அவரவர் முற்பிறவி கர்மாக்களின்படி படைத்து, காத்து, அழித்து வருபவர்கள் முறையே பிரம்மன்,
விஷ்ணு, ருத்ரன் ஆவார்கள். இந்த மும்மூர்த்திகளையும் அந்த சதாசிவன் சார்பாக நிர்வாகித்து வருபவரே
ஸ்ரீ காலபைரவர். ஸ்ரீகால பைரவரின் உயர்ந்த அவதாரமே ஸ்ரீ சொர்ணாகர்ஷண
பைரவர் அவதாரமாகும்.
நமது மூளையில் இருக்கும் ரத்த சிகப்பணுக்களை இயக்குபவர்
சூரியபகவானே! ஒவ்வொரு ஜாதகருக்கும் ஆத்மாக்காரகனாக இருந்து நமது ஆத்மாவை இயக்கி
வருபவர் சூரியபகவான். அப்பேர்ப்பட்ட சூரியனுக்குள் இருந்து
அருள்பாலித்து வருபவள் ஸ்ரீகாயத்ரிதேவி. ஆனால், சூரியனின் பிராண தேவதையாக
இருப்பவர் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர்! அனைத்து குல தெய்வங்களுக்கு அருளாற்றலை நொடி
தோறும் வழங்கிக் கொண்டிருப்பவரே இவர். இவரை பழங்காலத்தில்
சேர, சோழ,
பாண்டிய மன்னர்களும் மற்றும் ஏராளமான குறுநில மன்னர்களும் தமது
பொக்கிஷ அறையில் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரை ஸ்தாபித்து,
வழிபட்டு வளமோடும், வலிமையோடும், சகல சம்பத்துக்களோடும் வாழ்ந்து வந்துள்ளனர்.
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிறப்பான ஒரு தனி ஆலயம் :
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிறப்பான ஒரு தனி ஆலயம் அமைக்கப்பட்டு பிரதி மாதம் அஷ்டமிகளிலும், பௌர்ணமி நாட்களிலும் திருவாதிரை நக்ஷத்திரத்திலும் சிறப்பு பூஜைகளும், ஹோமங்களும், அஷ்டோத்தரங்களும், ஸஹச்ர நாம அர்ச்சனைகளும், பணம் தரும் பைரவரான ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவருக்கு பக்தர்களின் நலம் கருதி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் விரும்பும் நாட்களிலும் சிறப்பு யாகங்கள் இங்கு நடைபெறுகிறது.
மேலும் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு”
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி
வருகிற 08.08.2018 புதன்கிழமை ஆடி திருவாதிரை நக்ஷத்திரத்தில் மாலை
3.30 மணி முதல் 7.30 மணி வரை சொர்ண புஷ்பத்துடன்
1008 தாமரை இதழ்கள் கொண்டும், 1008 வில்வ இதழ்களை கொண்டு ஸ்ரீ சொர்ண
ஆகர்ஷண பைரவருக்கு சொர்ண பைரவர் யாகம், மஹா அபிஷேகம்,
ஸஹச்ர நாம அர்ச்சனை நடைபெற உள்ளது.
சொர்ண பைரவர் யாகம், மஹா அபிஷேகம், ஸஹச்ர நாம அர்ச்சனையின்
பலன்கள்:
மேற்கண்ட இந்த வைபவத்தில்
பங்கேற்பவர்களுக்கு கடன்கள் தீரும், அரசு வேலை கிடைக்கும், நிறுவனம் வளர்ச்சியடையும், வராக்கடன்
வசூலாகும், பொருளாதார நெருக்கடிகள் விலகும். ஆரோக்கியம் மேம்படும், வெளிநாட்டில் வாழும் நபர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கும், வெளிநாடு செல்வதிற்கு வழி கிடைக்கும், தெரியாத
குலதெய்வத்தை அறிந்து கொள்வீர்கள், கணவன் மனைவி
ஒற்றுமை மேம்படும், பிரிந்திருந்த
தம்பதியர் ஒன்று சேருவர், அவ்வாறு ஒன்று
சேர்ந்தப் பின்னர் ஒருபோதும் அவர்களிடையே மனக்கசப்பு வராது, குழந்தைகளின் முரட்டுசுபாவம் படிப்படியாக மாறும், சுருக்கமாகச் சொன்னால் நமது நியாயமான லட்சியங்கள்/கோரிக்கைகள்
நிறைவேறும்,
சாதி, சமய வேறுபாடுகள்
இன்றி பக்தி உணர்வு உள்ள எவரும் சொர்ண புஷ்பத்துடன்
1008 தாமரை இதழ்கள், 1008 வில்வ இதழ்களை கொண்டு ஸ்ரீ சொர்ண
ஆகர்ஷண பைரவருக்கு நடைபெறும் சொர்ண பைரவர் யாகம், மஹா
அபிஷேகம், ஸஹச்ர நாம அர்ச்சனை யாக பூஜைகளில் பங்கேற்கலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது:
நீங்கள் இந்த யாகத்திற்கும், மஹா அபிஷேகத்திற்கும், ஸஹச்ர நாம அர்ச்சனைக்கும் வெல்லக்கட்டிகள், மஞ்சள் பட்டுத்துண்டுகள், மண் அகல்விளக்கு, சுத்தமான பசுநெய், சந்தனம்,
வாசம் தரும் ஊதுபத்தி, அரைக்கப்பட்ட சந்தனம், வாழை இலை, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், சுக்கு, மிளகு,
நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், செவ்வரளி மாலை, தாமரை புஷ்பங்கள், வில்வம், முந்திரி,
திராட்சை, வஸ்திரங்கள் மற்றும் பூஜா பொருட்கள்
கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள்
பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
-9443330203
No comments:
Post a Comment