தன்வந்திரி பீடத்தில்
ஐஸ்வர்யம் தரும் அஷ்ட பைரவர் யாகம்
வருகிற 03.09.2018 திங்கட்கிழமை நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை கீழ்புதுபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
ஆக்ஞைப்படி வருகிற
03.09.2018 திங்கட்கிழமை தேய்பிறை அஷடமியை முன்னிட்டு, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி
வரை ஐஸ்வர்யம் தரும் அஷ்ட பைரவர் ஹோமமும் சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது.
.
அகங்காரத்தை
அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும்
பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள்
யாவும் விலகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி யாவும் நன்மையாக முடியும்
என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
மேலும் தீராத
வியாதிகள் தீரவும், நம்மை சூழ்ந்திருக்கும் பீடைகள்
ஒழியவும். கெட்ட அதிர்வுகள் விலகவும், மன அமைதியே இல்லாதவர்களுக்கு
மன அமைதி கிடைக்கவும் பைரவர்
துணையுடன் செல்வவளம்
பெருகவும் துன்பம் விலகி வாழ்க்கையில்
சுபிட்சம் உண்டாகவும் ஆபத்துகளில் இருந்தும் கஷ்டங்களில் இருந்தும் விடுபடவும் சகல
தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டவும். சனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும், பன்னிரண்டு ராசிகள், அஷ்ட திக்குகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள் என எல்லாவற்றையும்
கண்காணிக்கும் ஆதி தெய்வமான பைரவரின் அருள் கிடைத்திட தேய்பிறை அஷ்டமி தினத்தில்
அஷ்ட பைரவர் யாகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறவுள்ளது.
உலகில் எங்கும்
இல்லாதவாறு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள அஷ்ட பைரவர்களான ருரு பைரவர்,
சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீக்ஷன பைரவர், கபால பைரவர் என எட்டு பைரவர் மட்டுமின்றி மஹா கால பைரவர் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவருக்கும்
ஆதிசைவர்கள் வணங்கி வந்துள்ளா 64 விதமான பைரவர்களை நாம் வழிபடும்
விதத்திலும் அஷ்ட பைரவர்களே அறுபத்தி நான்கு காலங்களில், அறுபத்தி நான்கு தோற்றங்கள் கொண்ட பைரவராகக் காட்சி தருகிறார்கள். அஷ்ட பைரவர்களுக்கு சிறப்பு பூஜையுடன் மிளகு தீபம், கூஷ்மாண்ட தீபம், நெய் தீபம் ஏற்றி பைரவருக்கு
விருப்பமான தாமரை, வில்வம், தும்பை, அரளி, மற்றும் செவ்வந்தி, பூக்களால் சிறப்பு அர்ச்சனையும் நடைபெறவுள்ளது.
நீலநிற மேனியரான
பைரவர் பாம்பை முப்புரி நூலாகத் தரித்தவர். மண்டை ஓட்டு மாலை அணிந்தவர். சூலம்,
பாசம், மழு, கபாலம் ஏந்தியவர். திருமுடியில் பிறைநிலவு சூடியவர். பிரம்ம
சிரச்சேதர், க்ஷேத்திரபாலகர், வடுகர், ஆபத்துதாரணர், காலமூர்த்தி, கஞ்சுகன், திகம்பரன், கோர பைரவர், உக்ர பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், ஜுர பைரவர் என பலவாறு ரூபம் கொண்டவர். என்று பல திருப்பெயர்கள் பைரவருக்கு இருப்பதாக
புராணங்கள் கூறுகின்றன.
எட்டு தேய்பிறை
அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில்
சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. வருகிற 03.09.2018 தேய்பிறை அஷ்டமி நாள் அன்று துக்கங்கள்
யாவையும் மாற்றி நிம்மதியை அருளும் பைரவ வழிபாட்டை மேற்கொள்ளலாமே? என்கிறார் நமது ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகரும் பீடாதிபதியுமான
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment