வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
வாஸ்து ஹோமத்துடன்
தன்வந்திரி
பெருமாளுக்கு நெல்லிப்பொடி அபிஷேகம்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில், துன்பங்கள்
துயரங்கள் அகலவும், உடல் நோய் மன நோய் நீங்கவும், வலிகளில் இருந்து நிவாரணம் பெறவும், ஸ்தாபகர் மற்றும்
பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று
22.08.2018 காலை 10.00 மணி முதல் மஹா தன்வந்திரி ஹோமமும்
மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப்பொடி அபிஷேகம் நடைபெற்றது.
இதில் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், வாசனாதி திரவியங்கள், பசுநெய், வெல்லம், சுக்கு,
மிளகு, திப்பிலி, நல்லெண்ணை,
பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள்,
நிவேதன பொருட்கள் சேர்க்கப்பட்டது. இந்த தகவலை
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
வாஸ்து நாளான இன்று
வாஸ்து ஹோமம் நடைபெற்றது.
தன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவான் :
தன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவான் 6 அடி
விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச
பூதங்களுடன், அஷ்டதிக் பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவ
பெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று
பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு
ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கி சயன கோலத்தில் அருள் பாலித்துக்
கொண்டிருக்கும் அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
வாஸ்து என்கிற வார்த்தைக்கு வஸ்து என்று பொருள். வஸ்து என்பது நாம் வசிக்கும்
பூமி, நிலம் மற்றும் அதில் உள்ள பொருகளாகும். வஸ்துவில்
இருந்து வந்தது தான் வாஸ்து எனலாம். பூமி, நிலம் போன்ற பொருள்களில் இருந்து கிடைக்கும் மண்,
கல், சிமெண்ட், இரும்பு,
மரம் போன்ற வஸ்துக்களை கொண்டு, நாம் நமக்காக இருப்பிடம்
அமைத்து கொள்ள விரும்பும் போது நாம் பார்ப்பது தான் வாஸ்து சாஸ்திரம் ஆகும்.
வாஸ்து நாளான இன்று 22.08.2018 புதன்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை, வாஸ்து தோஷங்களால் ஏற்படும் தடைகள் குறையவும், பூர்ண வாஸ்துப்படி நாம் வாழும் இடங்களை மாற்றி அமைத்து கொள்ளவும். வாஸ்து பிரச்சனைகளால் ஏற்படும் போராட்டங்கள் நீங்கி மன உளச்சலில் இருந்து வெளியேறி வாழ்க்கை பிரகாசமாக வாழ வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் வாஸ்து பகவானுக்கு சாந்தி பூஜைகளும் நடைபெற்றது.
வாஸ்து ஹோம பிரசாதம் : இந்த ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து
யந்திரம், மச்ச யந்திரம், வாஸ்து மண்
வாஸ்து தேங்காய்,வாஸ்து பொம்மை மற்றும் வாஸ்து நிவர்த்தி
பொருட்களை விரும்பும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment