Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, October 6, 2016

தன்வந்திரி பீடத்தில் யாகத்திருவிழா

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டும், உலகத்தில் அனைத்து ஜீவ ராசிகளின் நலனுக்காகவும், சுமங்களிகளின் தீர்க்காயுள் வேண்டியும், லஷ்மி, சரஸ்வதி , துர்கா தேவியர்களின் அருளாசி பெறவும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் 04.10.2016 மற்றும் 05.10.2016. செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்கள் பலன் தரும் 16 ஹோமங்கள் நடைபெற்றது.

சூலினி துர்கா ஹோமம், வாஸ்து ஹோமம், அஷ்டதிக் பாலகர்கள் ஹோமம், கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமம், சுதர்ஸன ஹோமம், கார்த்தவீர்யாஜுனர் ஹோமம், சொர்ண பைரவர் ஹோமம், கால பைரவர் ஹோமம், அஷ்ட பைரவர் ஹோமம், சத்யநாராயணர் ஹோமம், லஷ்மி ஹயக்ரீவர் ஹோமம், குபேர லஷ்மி ஹோமம், பூ சூக்த ஹோமம், லஷ்மி நாராயணர் ஹோமம், ஸ்ரீ கருட ஹோமம், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஹோமம், தன்வந்திரி ஹோமம், த்ருஷ்டி துர்கா ஹோமம் ஆகிய  சிறப்பு ஹோமங்கள் மாபெரும் வகையில் 04.10.2016 மாலை பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கி 05.10.2016 மாலை 108 லட்டுக்கள், பல வகையான புஷ்பங்கள், சமித்துக்கள், நெய், சிவப்பு காய்ந்த மிளகாய், பட்டு வஸ்திரங்கள், பல வகையான பழங்கள், பல வகையான இனிப்புகள், கார வகைகள் மற்றும் பல வகையான மூலிகை திரவியங்கள் சேர்க்கப்பட்டு, பூர்ணாகூதியுடன் நிறைவு பெற்றது. இந்த ஹோமத்தின் சிறப்பு அம்சமான 10 பைரவர் ஹோமங்கள் 10 குண்டங்கள் அமைத்து, 10 சிவாச்சார்யார்கள்  அமர்ந்து ஹோமங்கள் செய்து, அதற்குரிய தெய்வங்களுக்கு அபிஷேகமும், ஆராதனைகளுடன் யாகத்திருவிழா சிறப்பாக நிறைவுபெற்றது.

இந்த ஹோமத்தில், ஏராளமன பக்தர்கள் பங்கு பெற்று நவராத்திரி நாயகிகளான    ஷ்மி, சரஸ்வதி மற்றும் துர்கா தேவியர்களின் அருளையும், ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அவர்களின் ஆசியையும் பெற்றனர். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632513.
Ph. 04172 – 230033 , 230274   (M) 9443330203 | Mail: danvantripeedam@gmail.com  








No comments:

Post a Comment