தமிழர் திருநாட்களில் முக்கியமான ஒன்று தீபாவளி பண்டிகை. இத்திருநாளில் குழந்தைகள்
முதல் பெரியோர் வரை மிகவும் சந்தோஷமாக வண்ண வண்ண பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த திருநாட்களில் தீயினால் எந்த வித அசம்பாவிதமும்
நிகழ்ந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், தன்வந்திரி
பீடத்தில் சேவை புரியும் சேவார்த்திகளுக்கும், தன்வந்திரி குடும்பத்தினருக்கும்,
பீடத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கும் மற்றும் சுற்றுபுற கிராம மக்களுக்கும்
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆலோசனையின்படி விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையில் அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை இன்று ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில், இராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்தின் சார்பாக
விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வேலூர் மாவட்ட
தீயணைப்பு அலுவலர் திரு.முருகேசன் அவர்கள் துவக்கி வைத்து சிறப்பித்தார்.
இராணிப்பேட்டை தீயணைப்பு அலுவலர் திரு.கமலக்கண்ணன்,
ஆற்காடு தீயணைப்பு அலுவலர் திரு.சக்திவேல் ஆகியோர்
பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தார். இதில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்புக் குழுவினர் கலந்து கொண்டனர்.
இறுதியில் தன்வந்திரி பீடத்தின் சார்பாக திரு.பழனி ஓய்வுபெற்ற தீயணைப்பு
அலுவலர் நன்றி கூறினார். இந்தத் தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment