“எல்லோரும் இன்புற்றிருப்பதுவேயில்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே”
என்ற வள்ளாலாரின் வாக்குப்படி, உலக நன்மைக்காகவும்,
அனைத்து ஜீவராசிகளும் இன்புற்றிருக்கவும், வாழ்வில்
சிறக்கவும் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில், புதன் கிழமை 05.10.2016
இன்று
வள்ளலார் பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமமும், வள்ளலார் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், அன்னதானமும்
நடைபெற்றது.
மேலும், சென்னையை சேர்ந்த திரு. கணேசன் கமலா தம்பதியினர் வஸ்திர
தானம் வழங்கி விழாவை சிறப்பித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று
வள்ளலாரிடம் ப்ரார்த்தனை செய்து, ஸ்வாமிகளின் ஆசியையும் பெற்றுச்
சென்றனர் என்பதனை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment