வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தன் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
அவர்களின் 57வது ஜெயந்தியை
முன்னிட்டு 26.10.2016
புதன்கிழமை
ஸ்வாமிகளின் புகைப்படம் அச்சிடப்பட்ட மை ஸ்டாம்ப் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில், கோட்ட
அஞ்சல்துறை கண்கானிப்பாளர் அரக்கோணம்
திரு. V. குணசீலன் அவர்கள், மை ஸ்டாம்ப் வெளியிட, அற்காடு ஸ்ரீ மஹாலட்சுமி கல்வி
நிறுவனங்கள் சேர்மன் திரு. D.L.பாலாஜி அவர்களும், வாலாஜா,
லாவண்யா மருத்துவமனை இயக்குனர் டாக்டர். தொப்ப
கவுண்டர் அவர்களும் வாலாஜாபேட்டை திருமதி. டாக்டர் குழந்தைவேலு, ராமு நர்சிங்ஹோம், அவர்களும் மை ஸ்டாம்ப் பெற்றுக்கொண்டு
விழாவினை சிறப்பித்தனர்.
ராணிப்பேட்டை, அஞ்சல்
துறை விற்பனை பிரிவு அலுவலர்
திரு. E.சிவக்குமார் அவர்களும் துறை சார்பான சேவைகளை குறித்து
சிறப்புறை ஆற்றி விழாவிற்கு பெருமை சேர்த்தார். தன்வந்திரி பீடத்தின் சேவார்த்திகள்
மற்றும் பக்தர்கள் விழாவில் பங்கு பெற்று ஸ்வாமிகளின் அசி பெற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment