Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, October 10, 2016

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 09.10.2016 மாலை 6.10 மணியளவில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில், மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விரைவில் பூர்ண குணமடைந்து, பணியை தொடர வேண்டி, இன்று கணபதி ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ம்ருத்ஞ்சய ஹோமம் மற்றும் கால பைரவர் ஹோமங்கள் நடைபெற்று ஸ்ரீ தன்வந்திரி விநாயகர், மரகதேஷ்வரர், மரகதாம்பிகை மற்றும் கால பைரவர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதணை நடைபெற்றது. இந்த சிறப்பு ஹோமங்களை ராணிப்பேட்டை இஞ்னியரிங் கல்லூரியின் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பாக தலைவர், திரு. போஸ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்இதில் அ.தி.மு.க மாவட்ட செயளாலரும், சோளிங்கர் சட்ட மன்ற உறுப்பினருமான திரு. கோ. பார்த்திபன், முன்னாள் மாவட்ட செயளாலர் திரு. சி. ஏழுமலை, வாலாஜா நகர மன்ற தலைவர், நகர செயளாலர் மற்றும் கழகத் தொண்டர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






No comments:

Post a Comment