Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, October 3, 2016

தன்வந்திரி பீடத்தில் பலன் தரும் 16 ஹோமங்கள்.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டும், உலகத்தில் அனைத்து ஜீவ ராசிகளின் நலனுக்காகவும், சுமங்களிகளின் தீர்காயுள் வேண்டியும், லஷ்மி, சரஸ்வதி , துர்கா தேவியர்களின் அருளாசி பெறவும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் 04.10.2016 மற்றும் 

05.10.2016. செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்கள்.
சூலினி துர்கா ஹோமம், வாஸ்து ஹோமம், அஷ்டதிக் பாலகர்கள் ஹோமம், கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமம், சுதர்ஸன ஹோமம், கார்த்தவீர்யாஜுனர் ஹோமம், சொர்ண பைரவர் ஹோமம், கால பைரவர் ஹோமம், அஷ்ட பைரவர் ஹோமம், குபேர லஷ்மி ஹோமம், பூ சூக்த ஹோமம், லஷ்மி நாராயணர் ஹோமம், ஸ்ரீ கருட ஹோமம், தன்வந்திரி ஹோமம், த்ருஷ்டி துர்கா ஹோமம் ஆகிய  சிறப்பு ஹோமங்கள் மாபெரும் வகையில் நடைபெற உள்ளது.

04.10.2016 மாலை பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கும் இந்த ஹோமங்கள், 05.10.2016 மாலை பூர்ணாகூதியுடன் நிறைவு பெறும். இந்த ஹோமத்தின் சிறப்பு அம்சமான 10 பைரவர் ஹோமங்கள் 10 குண்டங்கள் அமைத்து, 10 சிவாச்சார்யார்கள்  அமர்ந்து ஹோமங்கள் செய்ய உள்ளார்கள். ஹோமங்களை தொடர்ந்து, அதற்குரிய தெய்வங்களுக்கு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெறும்.

இந்த ஹோமத்தில், 108 லட்டுக்கள், 108 வகையான புஷ்பங்கள், சமித்துக்கள், நெய், சிவப்பு காய்ந்த மிளகாய், பட்டு வஸ்திரங்கள், பல வகையான பழங்கள், பல வகையான இனிப்புகள், கார வகைகள் மற்றும் பல வகையான மூலிகை திரவியங்கள் சேர்க்கப்பட உள்ளது. நடக்க இருக்கும் இந்த ஹோமத்தில், பங்கு பெற்று நவராத்திரி நாயகிகளான லஷ்மி, சரஸ்வதி மற்றும் துர்கா தேவியர்களின் அருளுடன் பதினாறும் பெற்று நோயின்றி,  சீறும், சிறப்புமாக வாழ வேண்டுமாய் கோருகிறோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு:

ஸ்ரீ தன்வந்திரி பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632513.
Ph. 04172 – 230033 , 230274   (M) 9443330203
Mail: danvantripeedam@gmail.com

  

No comments:

Post a Comment