தன்வந்திரி
அவதார தினத்தை சர்வதேச ஆயுர்வேத தினமாக மத்திய அரசு வருகிற 28ம் தேதி கொண்டாட உத்தரவு அறிவிப்பு வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில்
அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் மற்றும் ஸ்ரீ தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவ
மனையின் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மத்திய அரசுக்கு நன்றி
தெரிவிக்கிறார்.
பக்க
விளைவுகள் இல்லாத இந்த அயுர்வேத மருத்துவ சிகிச்சை மக்கள் மத்தியில் பிரபலம் பெற்று
வருகிறது.
பாமரர்கள் முதல் செல்வந்தர்கள் வரை ஆயுர்வேத சிகிச்சைக்கு மாறி வருகின்றனர்.
ஆங்கில மருத்துவம் போன்றே இங்கும் பல்வேறு நோய் சிகிச்சை பிரிவுகள் உள்ளது.
பக்க விளைவுகள் கிடையாது என்பதுடன் சில நோய்களுக்கு பிற மருத்துவத்தில்
இல்லாத சிகிச்சை கூட ஆயுர்வேதத்தில் உள்ளதால் இம்மருத்துவ முறைக்கு மாறி வரும் நோயாளிகளின்
என்ணிக்கையும் அதிகரித்துள்ளது எனலாம்.
மத்திய, மாநில அரசுகள் ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் அரசு வேலை வாய்ப்பு, முதுகலை
படிப்பு போன்றவற்றை ஏற்படுத்தி தருவதுடன், இதற்காக சர்வதேச தினம்
கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்தவர்களின்
கோரிக்கையை ஏற்று மத்திய அரசு பரிசீலணை செய்து, ஆயுர் வேத மருத்துவர்களுக்கு
முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தன்வந்திரி அவதார தினத்தை சர்வதேச ஆயுர்வேத தினமாக
மத்திய அரசு வருகிற 28ம் தேதி கொண்டாட உத்தரவு அறிவிப்பு வெளியிட்டிருப்பது
வரவேற்கத்தக்கது. சர்வதேச ஆயுர்வேத தின கொண்டாட்டம் பெருமளவில்
வெற்றி பெற பீடத்தின் சார்பாக, இந்த வருடம் முதல் தன்வந்திரி
அவதார தினத்தை சர்வதேச ஆயுர்வேத தினமாக ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடத்த உள்ளார்.
அதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் மற்றும் தன்வந்திரி
ஆயுர்வேத மருத்துவமனையின் ஸ்தாபகரும், பீடாதிபதியுமான ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment