வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், உலக நன்மைக்காகவும்,
உலக அமைதிக்காகவும், தர்ம காரியங்கள் தொடர்ந்து நடைபெறவும், அனைத்து தொழிற்துறையும்
மேன்மையுறவும், மழை பொழிந்து விவசாயிகளின் துயர் தீர்வதற்காகவும், நிகழும்
துர்முகி ஆண்டு புனித மாதங்களான புரட்டாசி மாதமான இன்று
27ம் நாள் (13/10/2016) வியாழக்கிழமை முதல் ஐப்பசி மாதம் 3 (19.10.2016) புதன் கிழமை வரை காலை மாலை இரு காலங்களில் அருள்மிகு ஸ்ரீ
மகிஷாசுர மர்த்தினி சன்னதி முன்பு பீடாதிபதி கயிலை
ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அக்ஞைப்படி யஜுர் வேத பண்டிட்
மற்றும் ஸ்ரீவித்யா உபாசகருமான ஸ்ரீ சூர்யநாராயண சர்மா அவர்கள் குழுவினர்களால் சப்த
ஸதி பாராயண சண்டி ஹோமம், நடைபெறுகிறது.
இன்று இதன் துவக்க விழாவினை டார்லிங் குழுமத்தின்
நிறுவனர் திரு. வெங்கடசுப்பு அவர்களும்,
அவரது புதல்வன் சிரஞ்சீவி. முரளி அவர்களும் துவக்கி வைத்து சிறப்பித்தனர். ஹோமத்தினை
தொடர்ந்து, ஏழு நாட்களும் மாலை 6 மணியளவில்
லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், ஆராதனைகளும் நடைபெறும்.
இதனை தொடர்ந்து, நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில்
ஆற்காடு கண்ணன் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. பாஸ்கர் அவர்களும், சித்தூர்
ஸ்ருதி பால் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. கன்னைய்யா ரெட்டி அவர்களும், கலந்து கொண்டு
விழாவினை சிறப்பு செய்தனர். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment