நிகழும் துர்முகி ஆண்டு புரட்டாசி மாதம்
27
(13/10/2016) வியாழக்கிழமை முதல்
ஐப்பசி மாதம் 3 (19.10.2016) புதன் கிழமை வரை காலை மாலை இரண்டு காலங்களிலும்
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள அருள்மிகு ஸ்ரீ
மகிஷாசுர மர்த்தினி சன்னதி முன்பு யஜுர் வேத பண்டிட்
மற்றும் ஸ்ரீவித்யா உபாசகருமான ஸ்ரீ.சூர்யநாராயண சர்மா அவர்கள்
குழுவினர்களால் சப்த ஸதி பாராயண சண்டி ஹோமமும், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும்,
தீபாராதணையும் நடத்தப்பட உள்ளது.
உலக நன்மைக்காகவும், “நோயற்று வாழட்டும் உலகு”
என்ற தாரக மந்திரத்தின் மூலம் மக்கள் நோயின்றி வாழவும், உலக அமைதி வேண்டியும், அன்னை தேவிக்கு மேலும்
அருள்பெருகும் விதமாக மஹாசண்டி ஹோமம் பெரும்
பொருட்செலவில் கயிலை
ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் கடந்த 12
ஆண்டுகளாக ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும், 365 நாட்கள் தொடர்
சண்டி ஹோமம் தன்வந்திரி பீடத்தில் ஸ்வாமிகள் நிகழ்த்தி உள்ளார்.
தேவி உருவாக்கும் அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அருளக் கூடிய ஒரு தெய்வம் சண்டி இந்த தேவி சக்தி வாய்ந்த தெய்வமாக
கருதப்படுகிறது.
இந்த சப்த ஸதி பாராயண சண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பலிகள்
தடைகள் ஆகியவை நீங்கி, செல்வம் சுகாதாரம் இன்பம் ஆகியவை
கிடைக்க ஆசிர்வதிக்கபடும்.
சண்டி தேவிக்கு பெண்கள் வழிபாடு செய்வது மிக சிறப்பாக
கருதப்படுகிறது.கடவுள் சக்திகளின் அனைத்து தெய்வீக சக்தியாக சண்டி தேவியை
வழிபடுகின்றனர். தேவியானவள் அண்டத்தை
காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார்.தேவியானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய
குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும்
இருந்தால் அவைகளை துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள்.அசுரர்களை அழிக்க பல்வேறு
வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சண்டி.
சண்டி ஹோமம், துவக்க கால பூஜையுடன் கணபதி ஹோம பூஜையில் உரிய தேவதைகள், தெய்வங்கள், பரிவார தெய்வங்கள் தேவர்களுடன், 64 யோகினிகளையும், 64 பைரவர்களையும் எழுந்தருளச் செய்து அவர்களுக்குரிய பலிகளையும் செய்து மங்கள
வாத்தியங்களுடன் துவங்கப்பட
உள்ளது.
பதிமூன்று அத்தியாயத்தையும் வேதபண்டிதர் ஒருவர் எந்தந்த அதிதேவதைகளுக்கான அத்தியாயம் என்பதனையும் அந்த
விளக்கத்தினையும், அந்தந்த தேவதைகளை வேண்டுதலால் ஏற்படும்
பலன்களையும் எடுத்துச்சொல்லி அந்த தேவதைகளுக்கான மந்திரங்களை இரண்டு வேதபண்டிதர்கள் தொடர்ந்து ஒரு வேதபண்டிதர் மற்ற ஏதபண்டிதர்களின் உதவியுடன் அனைத்து ஹோம திரவியங்கள், பூ மாலைகள், பட்டு
வஸ்திரங்கள், பழங்கள், பிரசாதங்கள் என்று வரிசைப்படி
சமர்பித்து பூர்ண அனுகிரகம் கிடைக்க அனைவரும் பங்கேற்கும் விதமாக 12-ஆம் அத்தியாயம் நிறைவடைந்தவுடன் பைரவ
பூஜை, வடுக பூஜை,
கன்யா பூஜை, சுமங்கலி பூஜை போன்ற பூஜைகளை செய்து,
பதிமூன்றாவது அத்தியாயமாக மஹாசண்டி
தேவியை இடைவிடாது வேதபண்டிதர்கள் மந்திரங்கள் மூலமாக எழுந்தருளச் செய்து ஏராளமான திரவியங்கள் சமர்ப்பித்தும், புடவைகள்
நெய்யினால் முழுமையாக நனைக்கப்பட்டு ஸ்வாமிகள் ஆசியுடன் மங்கள
வாத்தியங்களின் மங்கள இசையுடன் நிறைவாக மஹா பூர்ணாகூதியாக யாககுண்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மஹா தீபாரதனை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து உற்சவர்
மற்றும் மூலவர் மஹிஷாசுர மர்த்தினிக்கு மஹாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை, தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு:
வங்கி
விவரங்கள்:
Sri Muralidhara
Swamigal
State Bank of India
Walajapet – 632513
A/C No. 10917462439
IFSC Code:
SBIN0000775
|
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய
பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை
மதுரா
வாலாஜாபேட்டை – 632513
Ph : 04172-230033/9488209877/9488213701
|
No comments:
Post a Comment